24 7neem8
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க… வேப்பிலையின் சிறந்த 8 குணநலன்கள்!!!

ஆரோக்கியத்திற்கு பயன்தரவல்ல பல நல்ல விஷயங்களை உள்ளடக்கிய வேம்பின் பண்புகள் குறித்து சிறு வயது முதலே கற்றுள்ளோம். இந்த கட்டுரையில் நாம் வசீகரிக்கும் பண்புகள் கொண்டுள்ள வேம்பின் குணநலன்கள் குறித்து மறுபார்வை செலுத்துகிறோம். வேம்பின் குணநலன்களை வேம்பு நீர் வடிவில் பெறுவது குறித்தும் காண்போம்.

பலவித நோய்களை குறிப்பாக தோல் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க வேம்பினை பயன்படுத்துவது ஒரு பழங்கால முறையாகும். இந்த கட்டுரை வேம்பு குறித்தும், அதன் எண்ணிலடங்கா பண்புநலன்கள் குறித்தும், நமது மூத்த பெரியவர்கள் கூறியுள்ளவற்றைப் பற்றி பேசுகிறது. அவற்றைப் படித்தால் அவர்கள் கூறியுள்ள அனைத்தும் சரியே என்று நாம் நிச்சயம் உணர்வோம்.

தெற்காசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகியவையே வேப்ப மரத்தின் பிறப்பிடம் ஆகும். இந்த நாடுகளில் வேப்ப மரம் பரவலாக செழித்து வளர்ந்து பழங்காலத்தில் ஒரு மருத்துவ மூலிகையாக பயன்படுத்தப்பட்டது. எனினும் தற்காலத்தில் உள்ள மருத்துவ முறைகள் திறனுடன் பயன் தருகிறதோ இல்லையோ வேம்பின் பலன்கள் தற்போது புறக்கணிக்கபட்டு வருகிறது. வேம்பு நீரின் பலன்கள் குறித்து காண்போம். இப்போது வேம்பு நீரின் 8 வித நன்மைகளை அறிவோம்.

நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள்

வேம்பு நீரில் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் அதிகம் உள்ளது. இது வெப்பநிலை ஏற்ற இறக்கத்தால் சருமத்தில் ஏற்படும் வீக்கத்தை தவிர்க்க உதவுகிறது.

கரும்புள்ளிகளைக் குறைக்கிறது

இது சருமத்தின் அடுக்குகளில் குறிப்பாக நமது முகத்தில் உள்ள காணப்படுகின்ற கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிற காரணத்தால், இது இயற்கை நிவாரணியாக அறியப்படுகிறது. உண்மையில் இது சிறந்த இயற்கை நிவாரணியாக செயல்பட்டு கரும்புள்ளிகளை எளிதாக குறைக்கிறது.

செரிமான மண்டலத்தை சுத்தம் செய்கிறது

வேம்பு நீர் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் நமது சருமத்துடன் நின்று விடவில்லை. நமது உடலின் செரிமான அமைப்பை சுத்தம் செய்வதில் வேம்பு நீர் திறன்பட செயலாற்றுகிறது. அதேப்போல நமது உடலின் குடல் மற்றும் சிறுநீரகங்கள் ஆகியவற்றையும் சுத்தம் செய்ய உதவுகிறது.

ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு குணநலன்கள்

வேம்பு நீர் வாய் வழியாக நுகரப்படும் போது, சிறந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளை நமது உடலுக்கு வழங்குகிறது. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி நமது உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றி செரிமானத்தை மேம்படுத்துகிறது.

முதுமையை தடுக்கும் பண்புகள்

மாசுக்களையும், நச்சுகளையும் ஒதுக்கி வைக்கத்தக்க சிறந்த இயற்கை மூல ஆதாரமாக விளங்குகிற ஊட்டச்சத்துகள் நிறைந்த அமைப்பு வேம்பில் அதிகம் காணப்படுகிறது. இது சருமத்தை சுத்தமாக வைப்பதோடு, சருமத்தை முதுமையடைய செய்யும் மாசுக்கள், கிருமிகள் மற்றும் நச்சுகள் போன்றவற்றிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

முகப்பருவை எதிர்க்கும் பண்பு

இதில் நிறைந்திருக்கும் சிறந்த மூலிகை பண்பின் காரணமாக பருவை போக்குவதில் சிறந்த முறையில் செயலாற்றுகிறது. முகப்பருவை இயற்கையாக போக்கும் சிறந்த பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள் வேம்பில் காணபடுகின்றன. இதனை பாலுடனோ அல்லது தேனுடனோ பயன்படுத்தும் போது இதன் வலிமை மேலும் அதிகரிக்கிறது.

முக சருமத்தின் திசுக்களை உறுதியாக்குகிறது

வேம்பு முக சருமத்தின் திசுக்களை மேலும் உறுதியாக்கி சருமத்தை டோன் செய்ய உதவுகிறது. இது தோலுடன் தொடர்புடைய வெடிப்புகள் சம்பந்தமான பிரச்சனைகளை அதிசயத்தக்க முறையில் சரி செய்கிறது. களங்கமற்ற சருமத்தைப் பெற உதவும் சிறந்த வழிகளில் வேம்பு நீரும் ஒன்று.

சிறந்த இயற்கையான ஈரப்பதமூட்டி

வேம்பு தனது சிறந்த பண்பு அமைப்பின் காரணமாக இயற்கை ஈரப்பதமூட்டியாக செயல்படுகிறது. இது தனது சிறப்பான ஊட்டச்சத்து அமைப்பின் காரணமாக வறட்சி மற்றும் வெடிப்புகளுக்கு எதிராக செயல்பட்டு சருமம் உலர்ந்து போவதிலிருந்து தடுக்கிறது.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

Related posts

சோடா குடித்தால் செரிமானமாகுமா? நிஜமா?

nathan

பெண்களை மிரட்டும் மார்பகப் புற்றுநோய்

nathan

பச்சை குத்தி கொண்டதால் ஏற்படும் விளைவு:

nathan

ஒரு பெண்ணின் வேதனை! ‘என் பிள்ளை நல்லபிள்ளைதான். வந்ததுதான் சரியில்லை’

nathan

பற்களில் இருந்து துர்நாற்றம் வருவது ஏன்?

nathan

தெரிஞ்சிக்கங்க…வீட்டில் ஊதுபத்தியை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்!!!

nathan

பாலுடன் தேன் அருந்துபவரா நீங்க.?

nathan

சூப்பர் டிப்ஸ் ! உடல் எடையை குறைக்க இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்….!!

nathan

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்கலையா? இத ட்ரை பண்ணி பாருங்க…

nathan