8 pineapple
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…அன்னாசிப்பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

தனித்துவமான நிறம், வடிவம் மற்றும் முட்கள் நிறைந்த இலைகளை கொண்டதால் தான் மற்ற பழங்களுக்கு மத்தியில் அன்னாசிப்பழம் சுலபமாக கண்டுகொள்ளும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த பழத்தின் அடர்த்தியான மஞ்சள் நிறம் மற்றும் அதன் தேனான சுவை கண்டிப்பாக நம் நாக்கில் எச்சிலை ஊற வைக்கும். இனிப்பாக இருக்கும் இந்த பழத்தை கொண்டு பழச்சாறு, சாலட் மற்றும் இதர உணவு வகைகளை தயாரிக்கலாம். இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் பல மருத்துவ நிலைகளை குணப்படுத்தவும் உதவுகிறது.

அன்னாசிப்பழம் இனிப்பாகவும் சுவை மிக்கதாகவும் இருந்தாலும் கூட பல மருத்துவ காரணங்களுக்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த பழத்தினால் பல பக்க விளைவுகளும் ஏற்படுவதுண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? ஆனால் இந்த பக்க விளைவுகள் எல்லாம் ஆபத்தானது அல்ல. இதனை அளவாக சாப்பிட்டு வந்து, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் கடைப்பிடித்தால் மோசமான விளைவுகள் ஏதும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கலாம்.

அன்னாசிப்பழத்தால் ஏற்படும் 10 பக்க விளைவுகளை பற்றி இப்போது விரிவாக பார்க்கலாமா?

அலர்ஜிகள்

அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் சில பெண்களுக்கும் ஆண்களுக்கும் லேசான அலர்ஜிகள் ஏற்படலாம். உத்து வீக்கம் மற்றும் தொண்டையில் ஏற்படும் கூச்ச உணர்வே அதற்கான அறிகுறிகளாகும். இதனை போக்க அன்னாசிப்பழ துண்டுகளை சுத்தமான உப்பு தண்ணீரில் கழுவ வேண்டும். சொறியை ஏற்படுத்தும் பழ என்சைம்களை இது கழுவி விடும்.

கருச்சிதைவு ஏற்படும் இடர்பாடு

கருச்சிதைவு ஏற்படும் இடர்பாட்டுடன் அன்னாசிப்பழம் அடிக்கடி சம்பந்தப்படுத்தப்படுகிறது. கருவை சுமக்கும் பெண்கள் இந்த பழத்தை உண்ணாமல் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இருப்பினும் பிரசவத்தின் ஆரம்ப கட்டங்களில் இல்லாமல் பிற கட்டங்களில் பெண்கள் இந்த பழத்தை உண்ணலாம்.

கீல்வாதம் மற்றும் முடக்குவாத இடர்பாடு

அன்னாசிப்பழம் சாப்பிடும் போது அது இரைப்பை குடலுக்குள் செல்லும் போது அல்கஹாலாக மாறி விடுகிறது. இதனால் அதை உட்கொள்பவர்களுக்கு அது கீல்வாதத்தை தூண்டி விடும். அதனால் முடக்குவாதம் மற்றும் கீல்வாதம் உள்ளவர்கள் அன்னாசிப்பழத்தை அதிகமாக சாப்பிட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இரத்த சர்க்கரையை ஊக்குவிக்கும்

அன்னாசிப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அடங்கியுள்ளது. ஆனால் அது அதிகளவில் உள்ளது தான் பிரச்சனையே. அடிப்படையில் அது சுக்ரோஸ் மற்றும் ஃப்ரூக்க்டோஸை கொண்டுள்ளது. ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதன் தாக்கம் நல்லதல்ல. எவ்வளவு பழத்தை உட்கொள்கிறீர்கள் மற்றும் எத்தனை முறை உட்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் தாக்கத்தின் அளவு இருக்கும். இது இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரிக்க வைக்கும். இரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால் ஒரு நாளைக்கு 2 துண்டுகளுக்கு மேல் உட்கொள்ளாதீர்கள்.

உண்ணும் மருந்துகளோடு சேர்ந்து கொள்ளுதல்

அன்னாசிப்பழத்தில் ப்ரோம்லைன் உள்ளது. இது நாம் உண்ணும் சில மருந்துகளோடு சேர்ந்து கொண்டு பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீங்கள் ஆன்டி-பயாடிக்ஸ் மற்றும் வலிப்புத் தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி வந்தால், இந்த பழத்தை உட்கொள்ள வேண்டாம். இது அல்கஹாலுடனும் செயலாற்றும். இவ்வகையான மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள், இந்த பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவ வல்லுனர்களை அணுகுவது நல்லது.

கடுமையான வாந்தி எடுக்கக்கூடும்

பழுக்காத அன்னாசிப்பழத்தை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் போட்டு குடித்தாலோ அது ஆபத்தை ஏற்படுத்தலாம். இது நச்சுத்தன்மையை ஏற்படுத்தி விடும். கடுமையான வாந்தியையும் உண்டாக்கும்.

ஊறும் உணர்வு

அன்னாசிப்பழத்தில் அதிக அளவிலான அசிடிட்டி உள்ளது. இதனால் வாய் மற்றும் தொண்டையில் ஏற்படும் சளி உற்பத்தி பாதிக்கப்படும். அதனை உட்கொண்ட பிறகு வாயிலும் தொண்டையிலும் ஊறும் உணர்வு ஏற்படும். இதனால் சில பேருக்கு வயிற்று வலியும் கூட ஏற்படும்.

இரத்தத்தை மெலிவூட்டும் மருந்துகளோடு சேர்ந்து கொள்ளுதல்

இரத்தத்தை மெலிவூட்டும் மருந்துகளை உண்ணுபவர்கள் இந்த பழத்தை சாப்பிட கூடாது. மேலும் இரத்தத்தை உறைய வைக்கும் செயல்முறையிலும் ஊடுருவும்.

ப்ரோம்லைன் – பாதகமான எதிர்வினைகள்

அன்னாசிப்பழத்தில் உள்ள ஒரு முக்கிய பொருளான ப்ரோம்லைன், புரதத்தை உடைக்கும். இது எரிச்சலை ஏற்படும் தோல் அழற்சி வளரவும் முக்கிய காரணமாக இருக்கும். மேலும் அலர்ஜியை ஏற்படுத்தும் தோல் அழற்சியையும் ஊக்குவிக்கும்.

பற்களின் சுகாதாரம்

பற்களின் மோசமான சுகாதாரத்திற்கு இது முக்கிய காரணம் இல்லையென்றாலும் கூட, இதனை அதிகமாக உட்கொண்டால் பற்களில் ஏற்படும் கரைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். பற்களின் எனாமலின் மீதும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். பல் புழைகள் மற்றும் பல் ஈறு அழற்சி பிரச்சனைகளை கொண்டவர்கள் அன்னாசிப்பழத்தை அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.

இந்த பழத்தை உட்கொள்வதால் பல உடல்நல பயன்களும் இருக்கிறது. இருப்பினும் அளவாக சாப்பிட்டால் அது விஷமாக மாறாமல் இருக்கும். நல்லது நடக்க வேண்டுமென்றால் இந்த பழத்தை குறைவாகவே சாப்பிடுங்கள்.

Related posts

இதெல்லாம் சாப்பிட்டா கல்லீரல் எப்பவும் பத்திரமா இருக்கும் தெரியுமா!

nathan

சூப்பர் ஸ்லிம் ஃபுட்ஸ் 8

nathan

தெரிஞ்சிக்கங்க… கருவின் சிறந்த மன வளர்ச்சிக்கு கர்ப்பிணி பெண்கள் தினமும் எவ்வளவு பாதாம் சாப்பிடலாம் ?

nathan

கேரட் உருளைக்கிழங்கு சூப்

nathan

வாயு தொல்லை இருந்து விடுபட பூண்டு களி

nathan

உங்களுக்கு தெரியுமா பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த ஆளி விதையின் நன்மைகள்..!

nathan

வாதம், வயிற்றுப் புண், வயிற்றுப் புழுக்களை நீக்கும் நார்த்தங்காய்

nathan

வாழைப்பழத்தை கொண்டு தயாரிக்கப்படும் டீ பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது….

sangika

முட்டையை ஏன் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan