30.6 C
Chennai
Saturday, May 18, 2024
maxre
சமையல் குறிப்புகள்

சுவையான மணமணக்கும் பருப்பு ரசம்!

பலருக்கும் ரசம் என்றால் அதீத பிரியம் இருக்கும். பல வகையான ரசத்தை சுவைத்து பார்த்து இருப்பார்கள். ஆனால் இருமல் சளி போன்ற பிரச்சினைகளை விரட்டியடிக்கும் பருப்பு ரசத்தை சாப்பிடத்துண்டா! அருமையான மணமணக்கும் பருப்பு ரசத்தை எப்படி வைக்கலாம் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு முக்கால் கப்

மிளகு ஒரு டீஸ்பூன்

சீரகம் அரை டீஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத் தூள் கால் டீஸ்பூன்

கடுகு ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை இரண்டு கொத்து

பச்சை மிளகாய் – 2

பெரிய தக்காளி ஒன்று

மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்

தனியாத் தூள் ஒரு டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு,

புளித்தண்ணீர் அரை கப்,

கொத்தமல்லி தழை நறுக்கியது

செய்முறை விளக்கம்

முதலில் ஒரு குக்கரை எடுத்து துவரம் பருப்பை சுத்தம் செய்து அதனுள் போட்டு, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.

அதன்பின்னர், அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி 4 கப் விசில் வரும் வரை எடுத்துவிடவும். அடுத்ததாக ஒரு வாணலியை எடுத்து, மிளகு சேர்த்து 2 நிமிடம் லேசாக வறுக்க வேண்டும்.

அதனுடன் சீரகம் சேர்த்து வறுத்து, எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துகொள்ள வேண்டும். குக்கரில் இந்த வெந்த பருப்பை மசித்துவிட்டு, 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து, தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி, பெருங்காயத்தூள் கடுகு, போட்டி பொரிய விடுங்கள்.

கடுகு பொரிந்ததும் கருவேப்பில்லையை சேர்த்து கழுவி துருவி சேர்த்து தாளித்துக்கொள்ளவும், பின்னர் பச்சை மிளகாய் சேர்த்துவிட்டு தக்காளி போட்டு வதக்கி விட வேண்டும்.

உப்பு போட்டு வதக்கியதும், புளித்தண்ணீரை ஊற்றி நன்குகொதிக்க விட்டு, மஞ்ச தூள், தனியாத்தூள் ஊற்றி கொதிக்க விட்டுவிட வேண்டும்.

அதன்பின், ரசத்திற்கு தேவையான உப்பு சேர்த்து கரைத்து வைத்துள்ள பருப்பு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். 5 முதல் 8 நிமிடம் வரை ரசம் நன்கு கொதித்து வந்ததும், அரைத்து வைத்த மிளகு, சீரக தூள் சேர்த்து கலந்துவிட வேண்டும்.

2 நிமிடம் கொதித்த பிறகு நறுக்கிய மல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.அவ்வளவு தான் மணமணக்கும் பருப்பு ரசம் ரெடி!….

Related posts

சூப்பரான சேனைக்கிழங்கு பொரியல்

nathan

சளிக்கு இதமான… மிளகு பூண்டு குழம்பு

nathan

குறுகிய நேரத்தில் சுவையான பச்சை மீன் குழம்பு செய்வது எப்படி?

nathan

ருசியான பாசிப்பருப்பு கார சுண்டல்!

sangika

ருசியான பிரட் உப்புமா

nathan

கல்யாண வீட்டு வத்தக்குழம்பு!

nathan

சூப்பரான வெங்காய போண்டா

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு பொடிமாஸ்!….

sangika

சுவையான மாங்காய் சாம்பார்

nathan