33.3 C
Chennai
Saturday, May 18, 2024
10 bread egg upma
சமையல் குறிப்புகள்

பிரட் முட்டை உப்புமா எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

மாலையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தையின் பசியைப் போக்குவதற்கு பிரட் முட்டை உப்புமா சிறந்ததாக இருக்கும். இந்த ரெசிபியானது மாலையில் மட்டுமின்றி, காலையிலும் காலை உணவாக சாப்பிடுவதற்கு ஏற்றவாறு இருக்கும். ஏன் பேச்சுலர்கள், காலையில் அவசரமாக அலுவலம் செல்வோர் கூட இந்த ரெசிபியை முயற்சிக்கலாம்.

அந்த அளவில் இதனை நொடியில் சமைக்கக்கூடியவாறு இருக்கும். சரி, இப்போது அந்த பிரட் முட்டை உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Bread Egg Upma
தேவையான பொருட்கள்:

பிரட் – 3 துண்டுகள்
முட்டை – 1
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)
பெருங்காயத் தூள் – சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பிரட்டை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி, அத்துடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து அதில் பிரட் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் நன்கு டோஸ்ட் செய்து இறக்கினால், பிரட் முட்டை உப்புமா ரெடி!!!

Related posts

சுவையான வரகு சாமை சர்க்கரை பொங்கல்

nathan

சுவையான மஞ்ச பூசணி சாம்பார்

nathan

சூப்பரான செட்டிநாடு பால் பணியாரம்

nathan

பட்டாணி மசாலா

nathan

பன்னீர் சீஸ் டோஸ்ட்

nathan

கண்டந்திப்பிலி உடல் வலியை போக்கக்கூடியது….

sangika

சுவையான எள்ளு பன்னீர் மஞ்சூரியன்

nathan

தோசை மீந்து விட்டதா… கவலைய விடுங்க..

nathan

சுவையான பிரெட் பிரியாணி – செய்வது எப்படி?

nathan