30.6 C
Chennai
Saturday, May 18, 2024
சாம்பார் சாதத்திற்கு ஏற்ற இறால் சுக்கா
அசைவ வகைகள்

நாவூரும் சுவையில் இறால் சுக்கா! எவ்வாறு தயார் செய்யலாம்?

இறால் மீன் என்றாலே நாக்கில் எச்சில் ஊறும் அளவிற்கு மிகவும் சுவையானது. அப்படிப்பட்ட இந்த இறாலை மிகவும் வித்தியாசமான முறையில் சமையல் செய்து சாப்பிடலாம். தற்போது இறால் மீன் சுக்கா எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

இறால் – 1/2 கிலோ
குடைமிளகாய் – 1
வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 100 கிராம்
கல் பாசி – சிறிதளவு
அன்னாசி பூ – 2 காய்ந்த
மிளகாய் – 10
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:
முதலில் இறால் மீனின் தோடை உரித்து விட்டு அதன் சதை பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். பின் நன்றாக கழுவி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஊறவைக்கவும்.
அதன்பின் வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அதன்பின் கடாயில் எண்ணெய் ஊற்றி இறாலை பொரித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அதன்பின் சிறிதளவு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கல்பாசி, அன்னாசி பூ மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி மற்றும் பூண்டு கலவையை போட்டு பிரவுன் நிறம் வரும் வரை வதக்கவும். பின்பு அதனுடன் மஞ்சள் பொடி, மல்லித்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, தக்காளி மற்றும் உப்பு போட்டு தக்காளி நன்றாக குழையும் வரை வதக்கிய பின்பு, வறுத்த இறால் மற்றும் வெட்டிய குடை மிளகாயை சேர்த்து கிளறி இறக்கவும்.

Related posts

மூளை பொரியல் செய்வது எப்படி

nathan

இது வேற லெவல்!? ஆட்டுக்கால் குழம்பு செய்வது எப்படி..

nathan

சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு…

nathan

அரேபியன் மட்டன் மந்தி பிரியாணி

nathan

ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை ரெடி!!!

sangika

ரம்ஜான் ஸ்பெஷல்: கப்ஸா சோறு

nathan

கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் மசாலா

nathan

சன்டே ஸ்பெஷல் மட்டன் கீமா புட்டு

nathan

சுவையான சில்லி சிக்கன் செய்வது எப்படி | How To Make Chilli Chicken Recipe

nathan