28.3 C
Chennai
Saturday, May 18, 2024
brinjal masala
ஆரோக்கிய உணவு

சுவையான கத்திரிக்காய் மசாலா

கத்திரிக்காய் சிலருக்கு ரொம்ப பிடிக்கும். அத்தகையவர்கள் கத்திரிக்காயை சாம்பார், வறுவல் என்று தான் செய்து சுவைத்திருப்பார்கள். ஆனால் இங்கு கத்திரிக்காய் மசாலா எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதனை செய்து மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

சரி, இப்போது கத்திரிக்காய் மசாலாவின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Brinjal Masala Recipe
தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் – 2 (நறுக்கியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 3 (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
பட்டை – 1 இன்ச்
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

அரைப்பதற்கு…

தேங்காய் – 1 கப்
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2

செய்முறை:

முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு பிரட்டி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.

பின்பு அதில் கத்திரிக்காயை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து கத்திரிக்காயை வேக வைக்க வேண்டும்.

கத்திரிக்காயானது நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, குறைவான தீயில் 10-15 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு, மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கத்திரிக்காய் மசாலா ரெடி!!!

Related posts

இரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் 2 பொருட்கள்

nathan

கொய்யாவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

அழகான சமையலறைக்கு….

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த சிறிய பழதின் மூலம் உடலில் இழந்த ஆற்றலை திரும்ப பெற்று கொள்ள முடியும் ..!

nathan

நீங்கள் முட்டைகோஸ் வேக வைத்த தண்ணீரை குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

nathan

நீங்கள் காரம்ன்னு பச்சை மிளகாயை ஓரமா ஒதுக்கறீங்களா? அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா அம்மான் பச்சரிசி…!!

nathan

பச்சை வாழைப்பழம் தரும் பலவித நன்மைகள்

nathan

கார உணவுகள் உடலுக்கு நல்லதா?

nathan