44 brinjal tomato gostu
ஆரோக்கியம் குறிப்புகள்

சுவையான கத்திரிக்காய் தக்காளி கொஸ்து

கத்திரிக்காய் கொண்டு எப்போதும் சாம்பார், பொரியல், வறுவல் என்று செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக கத்திரிக்காயை தக்காளியுடன் சேர்த்து கொஸ்து செய்து சாப்பிடுங்கள். இந்த கொஸ்தானது சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிட ஏற்றவாறு இருக்கும்.

மேலும் பேச்சுலர்கள் கூட இந்த கத்திரிக்காய் தக்காளி கொஸ்துவை முயற்சிக்கலாம். சரி, இப்போது கத்திரிக்காய் தக்காளி கொஸ்துவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Brinjal Tomato Kotsu Recipe
தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பூண்டு – 4 பற்கள்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் கத்திரிக்காய் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பின் புளிச்சாறு சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போக வதக்கி இறக்கினால், கத்திரிக்காய் தக்காளி கொஸ்து ரெடி!!!

Related posts

கடுமையான கோபம் அடைபவர்களும் மாரடைப்பு நோயால் அவதி- ஆய்வில் தகவல்

nathan

மஞ்சள் பற்கள் வெள்ளையாக்க வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க…

nathan

ஏன் மருதாணி வைக்கிறோம் தெரியுமா? நமக்குக் கிடைக்கிற பலன்கள் என்னென்ன?

nathan

ஏன் தெரியுமா செம்பு பாத்திரத்தில் எந்த வகை உணவு பொருட்களை வைக்க கூடாது! ?

nathan

பதற்றத்தை குறைக்க வழி ஒன்று உள்ளது!…

sangika

அதிக நேரம் கணினி பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வுகள்

nathan

இந்த நேரத்தில் கனவு கண்டால் மிகவும் ஜாக்கிரதை….தெரிஞ்சிக்கங்க…

nathan

வெஜ் வான்டன் சூப்

nathan

தொப்பையைக் குறைக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan