29.2 C
Chennai
Wednesday, May 15, 2024
4 toothpaste
மருத்துவ குறிப்பு

வெள்ளையான பற்களை பெறுவதற்கான 5 ரகசியங்கள்!!!

ஒவ்வொருவரும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க பல்வேறு பராமரிப்புக்களை மேற்கொள்வோம். ஆனால் வாயை குறிப்பாக பற்களை பராமரிப்பவர்கள் மிகவும் குறைவு எனலாம். இதற்கு அவர்களின் சோம்பேறித்தனம் என்று கூட சொல்லலாம்.

இருப்பினும் பற்கள் நன்கு பளிச்சென்று இருந்தால் தான் தன்னம்பிக்கை அதிகரித்து, இளமையுடன் காட்சியளிக்க முடியும். உங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அதுவே உங்களை கோழையாக்கிவிடும்.

எனவே பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டியவைகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை தவறாமல் பின்பற்றி வாருங்கள். சரி, இப்போது வெள்ளையான பற்களை பெறுவதற்கான 5 ரகசியங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

அளவுக்கு அதிகமாக பிரஷ் வேண்டாம்

பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று சிலர் கடுமையாக பற்களை துலக்குவதோடு, எதை சாப்பிட்டாலும் பற்களை துலக்குவார்கள். இப்படி செய்தால் பற்களின் எனாமல் தான் போகும். ஆகவே எப்போதும் மென்மையாக பற்களை துலக்குவதோடு, இரண்டு முறை துலக்கினால் போதுமானது.

டீ, காபி, ஒயினில் அளவு தேவை

பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமெனில், ஒயின், டீ, காபி போன்றவற்றை அளவாக குடிக்க வேண்டும். ஏனெனில் இவை பற்களில் கறைகளை ஏற்படுத்தக்கூடியவை. முடிந்தால், இவற்றை தவிர்த்திடுங்கள். மேலும் அடர் நிறத்தில் உள்ள உணவுப் பொருட்கள் சாப்பிடுவதையும் தவிர்த்திடுங்கள்.

சூயிங் கம்

சூயிங் கம்மை மெல்லுவதன் மூலம், வாயில் எச்சில் உற்பத்தி அதிகரித்து, வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, பற்களும் வெள்ளையாகும். மேலும் சூயிங் கம் மெல்லுவது மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, இனிப்புகளின் மேல் உள்ள நாட்டத்தையும் குறைக்கும்.

அசிடிக் உணவுகள் வேண்டாம்

அசிடிக் நிறைந்த உணவுகள் மஞ்சள் நிற பற்களுக்கு வழிவகுக்கும். எனவே சோடா, எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி போன்ற அசிடிக் நிறைந்த உணவுகளை தவிர்த்து, நட்ஸ், தண்ணீர் மற்றும் தானியங்களை அதிகம் சாப்பிட்டு வாருங்கள்.

முறுமுறுப்பான உணவுப் பொருட்கள்

முறுமுறுப்பான உணவுப் பொருட்களான ஆப்பிள், கேரட், வெள்ளரிக்காய், பேரிக்காய் போன்றவற்றை உட்கொண்டு வருவதன் மூலம், பற்களில் ஏற்பட்ட கறைகள் நீங்கும். முக்கியமாக இந்த உணவுப் பொருட்களை ஜூஸாக சாப்பிடுவதை தவிர்த்து, அப்படியே கடித்து சாப்பிடுங்கள்.

Related posts

இன்னுமா உங்க குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்கிறது? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ஒருதலைக்காதலால் நடக்கும் கொலைகளுக்கு காரணம்

nathan

இருமலுக்கு உடனடி தீர்வு தரும் இயற்கை வைத்தியம்

nathan

மகளிர் தினம் தோன்றிய வரலாறு

nathan

வலி நிவாரணியாக செயல்படும் சிறப்பான ஆறு உணவுகள்!!!

nathan

தாயின் வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும் உணவுகள்

nathan

கருத்தரிப்பதை பாதிக்கும் மனஅழுத்தம்

nathan

சளி மற்றும் இருமலுக்கான பாட்டி வைத்தியங்கள்

nathan

கசகசாவில் இருக்கும் வியக்கத்தக்க டாப் 5 மருத்துவ குணங்கள்!!!

nathan