21 1511268675 03 1507020114 sideswepthairdo 1
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சைஹேர் கலரிங்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முக அழகை வசிகரமாக்கும் வண்ண கூந்தல்!

தங்களை இளமையாகக் காட்டி கொள்ள விரும்புவோர் அதிகமாய் முக்கியத்துவம் கொடுப்பது வண்ணக் கூந்தலுக்குத்தான்!

கூந்தலுக்கு வண்ணம் தீட்டிக் கொள்ளும் பேஷன் தற்போது அனைத்து தரப்பினரிடமும் அதிகமாய் பரவி வருகிறது.

சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி…. போன்ற மாநகரங்களில் பெரும்பாலான கல்லூரி மாணவிகள் வண்ணக் கூந்தலுடன் உலா வருவதை காண முடிகிறது.

பெண்களின் தோற்றத்தை எடுப்பாகக் காட்டுகின்ற இந்த வண்ணச்சாயங்களால் உடலுக்கோ, முடிக்கோ எந்தவித ஆபத்தும் இல்லை. அதனால் தான் தற்போது உலகம் முழுவதிலும் கூந்தலுக்கு கலர் சாயம் பூசிக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

நாம் எந்த பொருள் வாங்கினாலும் அதன் கலரைப்பார்த்து தான் வாங்குகிறோம்.

அதே போல நமது கூந்தலை வண்ணமயமாக மாற்றுவதில் தவறு இல்லை.

ஒரு காலத்தில் பெண்களின் கூந்தல் கருகருவென வளர்ந்திருப்பதுதான் அழகு என்று இருந்தது. ஆனால் இப்போது கூந்தல் கலர் கலராக இருந்தால் தான் பேஷன் என்ற நிலை வந்துள்ளது.

அதனால்தானோ என்னவோ தற்போது பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு பக்க விளைவுகளை உருவாக்காத ஹேர் கலர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கலரானது 3 முதல் 6 மாதங்கள் வரை முடியின் நிறத்தை மாற்றாமல் வைத்திருக்கும் தன்மை கொண்டது.

அனைத்து தரப்பு ஆண் – பெண்களுக்கும் ஏற்ற வகையில் 10-க்கும் மேற்பட்ட கலர் சாயங்கள் உள்ளன.

இந்த சாயங்களில் முடியை செழிப்பாக வைத்திருக்கக் கூடிய தாதுப் பொருட்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் முடி உதிரலும் தடுக்கப்பட்டு விடுகிறது.

கூந்தலுக்குப் பயன்படுத்தும் சாயங்களால் முடிக்கோ, தலைக்கோ பாதிப்பு எதுவும் கிடையாது.

நம் நாட்டு பெண்கள் கூந்தல் பிரகாசமாய் மின்னுவதையே விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சிவப்பு, வயலட், தாமிரம், பொன்னிறம் ஆகிய நிறங்களை பயன்படுத்தலாம். இந்த நிறங்கள் சூரிய ஒளி, பல்பு வெளிச்சம் போன்றவற்றில் கூந்தலின் நிறத்தை பளபளப்பாக காட்டும்.

கூந்தலுக்கு சாயம் பூசுவதில் பல்வேறு தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் பிரபலமானவை ஸ்லைசிங் டெக்னிக், ஹை-லைட்டிங் டெக்னிக், ஷூசைன் டெக்னிக், வீவிங் டெக்னிக், ஸ்ட்ரீக்கிங், குளோபல் டெக்னிக் போன்றவையாகும்.

ஹை-லைட்டிங் டெக்னிக் முறையில் தலைமுடி முழுவதுமோ அல்லது தேவையான பகுதி மட்டுமோ சாயம் பூசப்படுகிறது.

ஸ்லைசிங் டெக்னிக் முறையில் முடியானது 4 அங்குல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சாயம் பூசப்படுகிறது. இது எப்பேர்பட்ட நிறமுடையவர்களின் முகத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

வீவிங் டெக்னிக் முறையில் தலைமுடி இடைவெளிவிட்டு சாயம் போடப்படும்.

மற்றவர்களை டக்கென கவர விரும்புபவர்கள் இந்த முறையில் கலர் பூசிக் கொள்ளலாம்.

ரொமான்டிக் இன்ஸ்பெரேசன் முறையில் தலை முடிக்கு முதலில் அடர்த்தியான நிறமும், பிறகு வெளிர்நிறமும் மீண்டும் அடர்த்தியான நிறமும் பூசப்படுகிறது. இது கவர்ச்சியாக தோன்ற நினைக்கும் பெண்களுக்கு பொருத்தமானதாகும்.

தன்னை இளமையாக வெளிப்படுத்த நினைக்கும் பெண்கள் இந்த டெக்னிக்கை பயன்படுத்தலாம்.

குளோபல் டெக்னிக் முறை என்பது ஒட்டு மொத்த தலை முடியையே மாற்றிக் கொள்ளும் முறை ஆகும்.

தலை முழுவதும் நரைத்தவர்கள் இந்த முறையைப் பயன்படுத்தி கலர் பூசிக்கொள்ளலாம்.

இதில் ஒரே நிறத்தை வெவ்வேறு அடர்த்தியில் 3 அடுக்குகளாகப் பிரித்து பூசிக் கொள்ளலாம்.

சிவப்பு நிறம் உடையவர்களுக்கு இந்த டெக்னிக் ரொம்ப பொருத்தமாக இருக்கும்.

நகர்புற பெண்களிடம் இருந்த இந்த கலர் மோகம் தற்போது கிராமத்து பெண்களிடமும் பரவி உள்ளது.

காரணம் இளவயதிலேயே பெரும்பாலான பேர் இளநரையில் பாதிக்கப்பட்டிருப்பது தான்.

தலை முடிக்கு வண்ணச்சாயம் பூசும் முறை அறிமுகமான பிறகு நரை முடிக்காரர்கள் பலர் இதையே பின்பற்றத் தொடங்கி இருக்கிறார்கள்.

வண்ணச் சாயம் பூசினால் வசிகர அழகு கிடைப்பதுடன் தன்னம்பிக்கையும் கிடைக்கிறது. அழகுணர்ச்சியையும் மேம்படுத்துகிறது. வண்ணங்களால் வாழ்க்கையை வசப்படுத்துவோம்!21 1511268675 03 1507020114 sideswepthairdo

Related posts

முடி உதிர்வதை நினைத்து கவலைப்படுகிறீர்களா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க…

nathan

பலவீனமான முடியை வலிமையாக்க உதவும் சில அட்டகாசமான எளிய வழிகள்!

nathan

கேசத்தின் வேர் முதல் நுனி வரை அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து அலசுங்கள்.

nathan

இயற்கை ரீதியாகவே முடியின் எல்லாவித பிரச்சினைகளுக்கும் தீர்வு!…

sangika

முடி உதிராமல் இருக்க முடியை கட்டுங்க!

nathan

முடிப்பிளவுகளை தடுக்கும் வழிகள்

nathan

செம்பருத்தி மாஸ்க்கை எப்படி கூந்தலுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க….

nathan

கூந்தல் இளநரையை நிரந்தரமாகப் போக்கும் கறிவேப்பிலை ஹேர்ஆயில்…சூப்பர் டிப்ஸ்…

nathan

சால்ட் அண்டு பெப்பர் ஹேர் ஸ்டைல் பெண்களை இந்த அளவுக்கு ஈர்க்குமா?

nathan