28.9 C
Chennai
Wednesday, May 22, 2024
22 63052fd8517ee
அசைவ வகைகள்

சிவையான நாட்டுக்கோழி வறுவல்

தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
வர மிளகாய் – 10
கருவேப்பிலை – 2 கொத்து
சின்ன வெங்காயம் – 250 கிராம்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
தக்காளி – 2
உப்பு – தேவையான அளவு
வரமல்லி – 2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 1/2 ஸ்பூன்
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 2
சோம்பு – 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
நாக்கில் எச்சில் ஊற வைக்கும் நாட்டுக்கோழி வறுவல்! தெருவே மணக்க இப்படி செய்து அசத்துங்கள் | Nattu Kozhi Varuval

செய்முறை
முதலில் 1 கிலோ நாட்டுக்கோழியை வாங்கி கல் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அத்துடன் 250 கிராம் அளவு சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது நாட்டுக் கோழி வறுவலை செய்ய தொடங்கலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ள வேண்டும். அதில் நல்லெண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து, சோம்பு சேர்த்து வதக்க வேண்டும்.

நாக்கில் எச்சில் ஊற வைக்கும் நாட்டுக்கோழி வறுவல்! தெருவே மணக்க இப்படி செய்து அசத்துங்கள் | Nattu Kozhi Varuval

பின்னர், அதனுடன் கருவேப்பிலை, வர மிளகாய், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள். வெங்காயம் வதங்கி வந்தவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி பழம் சேர்த்து தேவையான அளவு உப்பு, போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

அதன் பின்பு சுத்தம் செய்து வைத்திருக்கும் நாட்டுக்கோழியை கடாயில் போட்டு எண்ணெயில் இரண்டு முறை கலந்து விட்டு தனி மிளகாய்த்தூள் போட்டு, தண்ணீர் 1/2 லிட்டர் ஊற்றி மிதமான தீயில் வைத்து 25 லிருந்து 30 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

குழம்பு நன்றாக கொதித்து கோழி வெந்து அப்படியே செமி கிரேவியாக எண்ணெய்ப் பிரிந்து நமக்கு வரும்.

அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள்.அத்துடன் கொத்தமல்லி தூவி கிளறி இறக்கினால், சிவையான நாட்டுக்கோழி வறுவல் தயார்.

 

Related posts

சிக்கன் நக்கட்ஸ்-chicken nuggets

nathan

வீட்டிலேயே செய்யக்கூடிய‌ சில்லி முட்டை.

nathan

ஃபிங்கர் சிக்கன்

nathan

சுவையான சிக்கன் பிரைட் ரைஸ்

nathan

கேரட் முட்டை ஆம்லெட்

nathan

சைனீஸ் மட்டன் சாப்ஸ் செய்வது எப்படி

nathan

சுவையான வஞ்சிரம் மீன் கிரேவி

nathan

Easy சிக்கன் 65 : செய்முறைகளுடன்…!

nathan

சிக்கன் வறுவல்

nathan