31.7 C
Chennai
Thursday, May 23, 2024
ry6tu7iy8oupo
அழகு குறிப்புகள்

நீங்க எளிய வழிகள்! முகப்பரு மற்றும் தழும்புகள்..

முகப்பரு வருவது சாதாரணமான ஒன்று, நாம் சில எளிய வழிமுறைகளை முறையாக பின்பற்றுவதன் மூலம் அந்த பருக்களையும், அது ஏற்படுத்திய தழும்புகளையும் நீக்கி முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ளலாம்.

முதலில் முகத்தை சுத்தமாக கழுவ வேண்டியது அவசியமான ஒன்று, முகத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய், அழுக்கு போன்றவற்றை நீக்குவது முக்கியம். அதற்காக அதிகமாக முகத்தை கழுவினால் முகத்திலுள்ள எண்ணெய் சுரப்பிகள் குறைந்து முகத்தில் பருக்களும், வெடிப்பும் ஏற்படும். அதிகமாக முகப்பரு இருப்பவர்கள் முதலில் உங்களுடைய சருமம் என்ன வகை என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்ப தோல் மருத்துவரிடம் நீங்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். முகப்பருவை தடுக்க உங்கள் உடல் ஹைட்ரேட்டாக இருப்பது அவசியமானதாகும், தினமும் போதுமான நீர் குடிப்பது, பழசாறு அருந்துவது போன்றவற்றை செய்யலாம்.
ry6tu7iy8oupo
மேலும் தினமும் முகத்திற்கு மாய்ஸ்ச்சரைசர் போடுவது உங்கள் முகத்தை ஹைட்ரேட்டாக வைக்கவும், பருக்களை தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்ச்சரைசரை பயன்படுத்தி பருக்களை தடுக்கலாம். பென்சாயில் பெராக்ஸைடு, சாலிசிலிக் அமிலம், சல்ஃபர் போன்றவை காலண்டஹ் மருந்துகளை பயன்படுத்துவதும் முகப்பருவுக்கு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. ஒரு நாளைக்கு 8 க்ளாஸ் தண்ணீர் குடிப்பதை கட்டாயமாக்குங்கள். முகப்பரு வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக அதற்கு மேல் அதிகம் மேக்கப் போடுவது மிகவும் தவறான செயல். அப்படி அதிகமாக மேக்கப் போடுவதால் முகப்பரு இன்னும் தீவிரமாகமே தவிர, குறையாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவெளியில் கண்ட இடங்களில் நாம் கைகளை வைப்பதால் பாக்டீரியாக்கள் கைகளில் ஒட்டிக்கொள்கிறது, அந்த கைகளை நாம் முகத்தில் வைக்கும்பொழுது முகத்தில் கிருமிகள் தொற்றி பருக்கள் உருவாகிறது. அதனால் அடிக்கடி முகத்தைய் தொடும் பழக்கத்தை கைவிடுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பருக்களை அடிக்கடி தொடுவது, கிள்ளுவது போன்றவற்றை செய்வது தவறான பழக்கம், அதேபோல அதிகமாக வெயிலில் சுற்றினாலும் பருக்கள் வரும். தினமும் முகத்திற்கு டீ-ட்ரீ எண்ணெய் பயன்படுத்துவதால் முகப்பரு குறைந்து முகம் பொலிவடையும், அடுத்ததாக பிரெஞ்சு க்ரீன் களிமண்ணை முகத்தில் பேஸ்பேக் போல தடவுவதாலும் பருக்கள் வராமல் தடுக்கலாம். அதிகளவில் எண்ணெயில் பொறித்த உணவுகள், பால் பொருட்கள், சர்க்கரை பொருட்கள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

Related posts

உங்களுக்கு தெரியுமா கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான சில எளிய வழிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா ப்ராக்கோலி தரும் 10 ஆரோக்கியமான நன்மைகள்!!

nathan

வெளிவந்த தகவல் ! பிரபல இயக்குநர் நடிக்கும் முதல் படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்!..

nathan

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுப்பது எப்படி??

nathan

உங்கள் சருமம் பட்டுக்கே சவால் விடும் போங்க!

nathan

நீங்கள் நொடிப் பொழுதில் மென்மையான பஞ்சு போன்ற‌ தோலைப் பெற சில எளிய குறிப்புகள்:

nathan

எளிய முறையில் முக அழகைப் பாதுகாக்க . . .

nathan

பருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற

nathan

அழகு தரும் குளியல் பொடி

nathan