30.3 C
Chennai
Sunday, May 19, 2024
garlic 13 1497338084
ஆரோக்கியம் குறிப்புகள்

பூண்டு சிக்கன் ரைஸ் சமையல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – ¼ கப் (நறுக்கப்பட்டது)
ரெட் பெல் மிளகு – ½ கப் (நறுக்கப்பட்டது)
பூண்டு பற்கள் – 4 (அரைக்கப்பட்டது)
அரிசி – ½ கப் (சமைக்கப்படாதது)
வெஜிடபிள் ஆயில் (காய்கறி எண்ணெய்) – 2 டீ ஸ்பூன்
லெமன் ஜூஸ் – ¼ கப்
கோழியின் நெஞ்சுப்பகுதி – 1 (போன்லெஸ் மற்றும் துண்டுகளாக வெட்டியது)
இஞ்சி – 2 டீ ஸ்பூன் (நறுக்கப்பட்டது)
சோயா சாஸ் – 2 டீ ஸ்பூன்
தேன் – 1 டீ ஸ்பூன்
கோழி குழம்பு – ½ கப்
ப்ரெஸ் கொத்துமல்லி – 1 டீ ஸ்பூன் (நன்றாக நறுக்கியது)
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

1. ஒரு பௌலை எடுத்துகொண்டு அதில் சிக்கன், வெங்காயம், பூண்டு, இஞ்சி, எண்ணெய், உப்பு, மற்றும் லெமன் ஜூஸ் சேர்க்க வேண்டும். அதனை நன்றாக ஊறவைத்து, ஓரமாக வைத்துவிட வேண்டும். (30 நிமிடங்களிலிருந்து 1 மணி நேரம் வரை வைத்திருக்க வேண்டும்).
2. அதன் பின்னர், ஆழமான அடிப்பாகமுடைய குக்கரை எடுத்துகொண்டு அதில் அரிசியை சேர்க்க வேண்டும். அந்த அரிசி மென்மையாகும் வரை சமைக்க வேண்டும். பின் ஊற வைத்த சிக்கனை இத்துடன் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

3. அதன்பிறகு, ரெட் பெல் மிளகையும், சோயா சாஸையும் சேர்த்து மீண்டும் பிசைந்து கொள்ள வேண்டும். மேலும், கோழி குழம்பை அத்துடன் சேர்த்து, 5 லிருந்து 8 நிமிடங்கள் வரை அதனை மூடி வைக்க வேண்டும். (நன்றாக வேக வைப்பதற்காக)
4. கடாயை சோதித்து பார்த்து, அரிசி நன்றாக வேகவைக்கப்பட்டிருக்கிறதா? சிக்கன் மிருதுவாக இருக்கிறதா? என்பதனை சரிபார்த்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அதன்பின்னர், தேனையும், நறுக்கப்பட்ட கொத்துமல்லியையும் சேர்த்துகொள்ள வேண்டும்.
இப்பொழுது உங்களுடைய பூண்டு சிக்கன் ரைஸ் தயாராகி, சூடாக பரிமாறவும் உங்களை குதூகலத்துடன் வரவேற்கிறது.

Related posts

முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க மிக எளிதான முறை!..

nathan

ஆரோக்கிய வாழ்வில் தயிரின் பங்களிப்பு…!

nathan

ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி

nathan

ஹெல்த் ஸ்பெஷல்,, வெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்…?

nathan

மலச்சிக்கலை தீர்க்கும் அற்புத இயற்கை குறிப்புகள் நாளடைவில் நல்ல தீர்வு கிடைக்கும்.

nathan

உங்க வீட்ல இந்த பொருள் இருந்தா உடனே தூக்கி போடுங்க.. தெரிந்துகொள்வோமா?

nathan

90% கேன் வாட்டர் அபாயமானது!தெரிஞ்சிக்கங்க…

nathan

தனிப்பட்ட நேரமின்மையால் உணர்வுகளை இழக்க வேண்டாம்..

nathan

உங்களுக்கு பசி எடுக்க மாட்டேங்குதா ?அப்ப இத ஒன்றை மட்டும் சாப்பிடுங்கள்….

nathan