38.9 C
Chennai
Monday, May 27, 2024
முகப் பராமரிப்பு

இளம் வயதில் முகத்தில் சுருக்கம்: இதோ சில குறிப்புகள்

இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்குக் காரணம் ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளை இவர்கள் அதிகம் உண்பதுதான் எனக் கூறப்படுகின்றது. இது கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். இளமையிலேயே வயதானவர் போல் தோற்றமளித்தால் யாருக்குத்தான் கவலை வராது? உணவு விடயத்தில் சிறிது கவனம் செலுத்தினால் இவர்களது கவலை மறைந்தே போவது உறுதி. இதோ சில குறிப்புகள் உங்களுக்கு :

* காய்கறி பழ வகைகளைத் தவறாமல் சாப்பிடுங்கள். இயற்கையான காய்கறி, பழ வகைகளில் உள்ள விட்டமின் மற்றும் சத்துக்கள் தோளில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடியவை.
* வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளப்படையும்.
* துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
* வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். சுருக்கம் எட்டியும் பார்க்காது.
* நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.
* கறிவேப்பிலையிலுள்ள விட்டமின் ஏ இளமையான சருமத்தைத் தக்க வைத்துக் கொள்ள பெரிதும் உதவும். அடிக்கடி துவையல் செய்து சாப்பிடலாமே. முகத்தில் சுருக்கம் என்ற கவலை இனியுமேன்?”/>http://tamilbeautytips.net/wp-content/uploads/2016/02/ld36.jpg”/>

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆரஞ்சு பழத்தோலை கொண்டு மிருதுவான சருமத்தை பெற….

nathan

முகப்பொலிவுக்கு 5 வழிகள்!

nathan

முகம் பளபளப்பாகவும் இளமையுடனும் இருக்க சில அழகு குறிப்புகள்…!அப்ப தினமும் செய்யுங்க…

nathan

சருமத்தை மின்னச் செய்யும் பூசணிக்காய் ஃபேஸ் பேக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

nathan

அதிக செலவு செய்யாமல் சீக்கிரம் வெள்ளையாகணுமா? இதோ சில வழிகள்!

nathan

முகத்தில் உள்ள கருமை மாயமாய் மறையும் தெரியுமா! சூப்பரா பலன் தரும்!!

nathan

கூந்தல், சரும பிரச்சனையை தீர்க்கும் பப்பாளி

nathan

முக சுருக்கம் வருவதை தடுக்கும் மாம்பழ பேஸ் பேக்

nathan

சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் வாஷ்ஷை தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan