puliyotharai 2692193f
சைவம்

புளியோதரை

என்னென்ன தேவை?

புளி – ஒரு ஆரஞ்சுப் பழம் அளவு

நல்லெண்ணெய் – கால் கப்

பெருங்காயம் – ஒரு சிறு கட்டி

கடுகு – ஒரு டீஸ்பூன்

கடலைப் பருப்பு – 6 டீஸ்பூன்

நிலக்கடலை – 8 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் – 12 முதல் 15

கறிவேப்பிலை – சிறிதளவு

மஞ்சள் பொடி – ஒரு டீஸ்பூன்

வறுத்துப் பொடிக்க

கருப்பு எள் – 2 டீஸ்பூன்

தனியா – 4 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் – 3

மிளகு – 2 டீஸ்பூன்

வெந்தயம் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

புளியை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து, 3 கப் நீரில் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளுங்கள். பாதியளவு எண்ணெயைக் காயவைத்து அதில் பெருங்காயம், கடுகைப் போட்டுத் தாளியுங்கள். பிறகு கடலைப் பருப்பு, நிலக்கடலையைப் போட்டு நன்கு வறுபட்டதும் மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டுக் கருகாமல் வதக்குங்கள். பிறகு கறிவேப்பிலை, மஞ்சள் பொடி சேர்த்து, புளிக் கரைசலை விட்டுக் கிளறுங்கள்.

கலவை நன்றாகக் கொதித்து கெட்டியாக வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து அடிக்கடி கிளறுங்கள். இல்லையெனில் அடிபிடித்து விடும். தேவையான உப்பைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கும்போது மீதி எண்ணையைச் சேருங்கள்.

வெறும் வாணலியில் வெந்தயம் போட்டு சிவந்ததும், அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள். வெறும் வாணலியில் எள்ளை வறுக்கவும். அதை எடுத்துவிட்டு 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் தனியா, மிளகாய் வற்றல், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து, ஆறியதும் அவற்றுடன் எள்ளையும் சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள்.

புளிக்காய்ச்சல் எண்ணெய் பிரிந்து கெட்டியானதும் இறக்கி வையுங்கள். வெந்தய – மஞ்சள் பொடி, தனியாப் பொடியை அதில் சேர்த்துக் கலக்குங்கள். இதை ஆற வைத்த சாதத்தில் ஊற்றிக் கிளறுங்கள். விரும்பினால் வறுத்த முந்திரி சேர்க்கலாம். பச்சைப் பட்டாணியை வேகவைத்துச் சேர்க்கலாம். இந்தப் புளிக்காய்ச்சல் பத்து நாட்கள் வரை கெடாது. எண்ணெய் பிரிந்து கெட்டியாக ஆகிவிட்டால் ஃபிரிட்ஜில்கூட வைக்க வேண்டாம்.
puliyotharai 2692193f

Related posts

வாழைக்காய் பெப்பர் சாப்ஸ்

nathan

பனீர் பிரியாணி

nathan

ஈஸி லன்ச் :(10 நிமிடத்தில் செய்து விடலாம் )

nathan

புளிச்ச கீரை புளியோதரை

nathan

மாங்காய் சாதம்

nathan

தொண்டக்காய பாப்புல பொடி வேப்புடு

nathan

வேர்க்கடலை குழம்பு

nathan

சிம்பிளான… தக்காளி சாம்பார்

nathan

கம்பு தயிர்சாதம் செய்வது எப்படி

nathan