1 cheese pasta 1665408566
சமையல் குறிப்புகள்

ருசியான சீஸ் பாஸ்தா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

* பாஸ்தா – 250 கிராம்

* தக்காளி – 4 (நறுக்கியது)

* வரமிளகாய் – 2-3

* பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கியது)

* ஆரிகனோ அல்லது உலர்ந்த கற்பூரவள்ளி இலை – 1 டீஸ்பூன்

* பால் – 1/2 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1-2 டீஸ்பூன்

* சீஸ் – 1/2 கப் (துருவியது)

* கொத்தமல்லி – 3-4 டேபிள் ஸ்பூன்

* ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்1 cheese pasta 1665408566

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் உப்பு மற்றும் பாஸ்தாவைப் போட்டு வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Cheese Pasta Recipe In Tamil
* பின் மிக்சர் ஜாரில் வரமிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, ஆரிகனோ சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் அரைத்த தக்காளியை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட்டு 8-10 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு வேக வைக்க வேண்டும்.

* பிறகு அதில் பால் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள பாஸ்தாவை உடனே சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின்பு அதில் துருவிய சீஸ் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கி சூடாக பரிமாறினால், சீஸ் பாஸ்தா தயார்.

Related posts

சுவையான எண்ணெய் மாங்காய் தொக்கு.. செய்வது எப்படி?

nathan

வறுத்து அரைச்ச சாம்பார்

nathan

பெங்களூரு ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி

nathan

சூப்பரான முள்ளங்கி குடைமிளகாய் மசாலா

nathan

சுவையான உருளைக்கிழங்கு அவல்

nathan

சுவையான கேரட் பஜ்ஜி

nathan

சுவையான தட்டைப்பயறு குழம்பு

nathan

மட்டன் வெங்காய மசாலா

nathan

சுவையான செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல்

nathan