2 almond chicken 1660405721
அசைவ வகைகள்

பாதாம் சிக்கன்

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 1/2 கிலோ

* தயிர் – 1/2 கப்

* பாதாம் – 15

* முந்திரி – 10

* பச்சை மிளகாய் – 3

* வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

* பட்டை – 1 துண்டு

* கிராம்பு – 3

* ஏலக்காய் – 2

* சோம்பு – 1 டீஸ்பூன்

* பிரஷ் க்ரீம்/தேங்காய் பால் – 1/2 கப்

* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் பாதாம், முந்திரி மற்றும் பச்சை மிளகாயை நீரில் 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் அதை நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

Almond Chicken Recipe In Tamil
* பிறகு அதில் அரைத்த முந்திரி பாதாம் விழுது, கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி, அதன் பின் 1/4 கப் நீரை ஊற்றி குறைவான தீயில் 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* அதன் பின்னர் சிக்கன் துண்டுகள் மற்றும் தயிர் சேர்த்து 5 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.

* பின்பு பிரஷ் க்ரீம்/தேங்கால் பால், சுவைக்கேற்ப உப்பு, தேவையான அளவு நீர், மிளகுத் தூள் சேர்த்து கிளறி, சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். சிக்கன் நன்கு வெந்ததும், அதை இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், பாதாம் சிக்கன் தயார்.

Related posts

மட்டன் குருமா

nathan

செட்டிநாடு எலும்பு குழம்பு

nathan

சுவையான சிக்கன் பெப்பர் ப்ரை

nathan

மீன்ரின்வறை

nathan

ஆந்திரா ஸ்பெஷல்: கோங்குரா சிக்கன் குழம்பு

nathan

செட்டிநாட்டு இறால் வறுவல்

nathan

சிக்கன் லாலிபாப் / Chicken Lollipop

nathan

Prawn Briyani / இறால் பிரியாணி

nathan

காடை வறுவல் செய்முறை விளக்கம்

nathan