30.3 C
Chennai
Sunday, May 19, 2024
26
மருத்துவ குறிப்பு

பாட்டி வைத்தியம்! ஆறு சுவையும்… அஞ்சறைப் பெட்டியும்…, உணவே மருந்து

நம் சமையல் அறையில் உள்ள ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் தனி மருத்துவ குணம் உண்டு. அதை தெரிந்து கொண்ட நம் பாட்டிகள், தலைவலி, சளி  போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகாமல் வீட்டிலேயே மருத்துவம் செய்துக் கொண்டனர். அதைத்தான் ‘பாட்டி வைத்தியம்’ என்றும் அழைக்கிறோம். அப்படிப்பட்ட ‘பாட்டி வைத்தியங்கள்’ சில… வீட்டில் அன்றாடம் பயன் படுத்தப்படும் பட்டை மற்றும் தேன் இரண்டுக்கும் பல மருத்துவ குணங்கள் உண்டு. இவற்றை சேர்த்து சாப்பிட்டால், சில உபாதைகளை நாமே விரட்டி விடலாம்.

ஆர்த்ரடிஸ்:

வயதானவர்கள், நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு மூட்டு வலி ஒரு சாபக்கேடு. இவர்கள் ஒரு ஸ்பூன் தேனை இரண்டு ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் கலந்து அதனுடன் கொஞ்சம் பட்டைத் தூளை சேர்த்து குழைத்து வலியுள்ள இடத்தில் தடவி மெது வாக மசாஜ் செய்து வந்தால், வலி குறையும். இதேபோல ஒரு கப் சுடு தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் பட்டைத் தூளை சேர்த்து காலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆர்த்ரடிஸ் குணமாகும்.

முடி உதிர்தல்:

ஆண்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களுக்கும் இப்போது வேலை மற்றும் மனஉளைச்சல் காரணமாக முடி அதிகமாக உதிர்கிறது. சிலருக்கு வைட்டமின் குறைபாட்டாலும் இப்பிரச்னை இருக்கும். இதை போக்க குளிக்கும் முன் காய்ச்சிய ஆலிவ் எண்ணையில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் பட்டைத் தூளை கலந்து தலைமுடியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து அலசினால் முடி உதிர்வது குறையும்.

சிறுநீர்ப்பை தொற்று நோய்:

சிறுநீர்ப்பையில் தொற்று நோய் ஏற்பட்டவர்கள் இரண்டு ஸ்பூன் பட்டைத் தூள், ஒரு ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், சிறுநீர்ப்பையில் உள்ள கிருமிகள் அழியும். தொற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.

பல்வலி:

பல்வலிக்கு சிறந்த மருந்து பட்டை. ஒரு ஸ்பூன் பட்டைத் தூளை 5 ஸ்பூன் தேனுடன் கலந்து அதை வலியுள்ள பல்லில் தினமும் மூன்று முறை தடவி வந்தால் வலி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.

கொழுப்பு:

உடலில் அதிகமாக கொழுப்பு சேர்வது நல்லதல்ல. அதனால் பல உபாதைகள் ஏற்படும். அதை கட்டுப்படுத்த 2 ஸ்பூன் தேன், 3 ஸ்பூன் பட்டைத் தூளை அரை டம்ளர் பால் கலக்காத டீ தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும். அதேபோல சுத்தமான தேனை சாப்பிட்ட பிறகு சாப்பாடு உட்கொண்டால் உடலில் உள்ள கொழுப்பு குறையும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

26

Related posts

உங்களுக்கு நம் உடலில் இருக்கும் அமிலங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் தெரியுமா!!

nathan

இரண்டே நிமிடத்தில் மஞ்சள் நிற பற்கள் வெள்ளையாக வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பெண்கள் மார்பகங்களை பாதுகாக்க சில டிப்ஸ்

nathan

உங்களுக்கு தைராய்டு பிரச்சனை உள்ளதா? மேலும் இந்த பானங்களை அடிக்கடி குடியுங்கள்…

nathan

குழந்தைக்கு விரல் சூப்பும் பழக்கம் வர காரணம் – தடுக்கும் வழிகள்

nathan

பல் துலக்கும் போது ஆண்கள் செய்யும் தவறுகள்

nathan

மருமகள்களுக்கு சில அன்பான ஆலோசனைகள்

nathan

அடிக்கடி தலைவலிக்கான சித்த மருந்து

nathan

எலும்பு தேய்மானம் ஏற்பட என்ன காரணம்?

nathan