27.5 C
Chennai
Friday, May 17, 2024
sl3727
சிற்றுண்டி வகைகள்

ஹரியாலி பனீர்

என்னென்ன தேவை?

பனீர் க்யூப்ஸ் (சதுர துண்டுகள்) – 500 கிராம்,
கெட்டியான தக்காளி – 1,
பெரிய வெங்காயம் – 1,
(பாடியாக நறுக்கியது),
பெரிய குடைமிளகாய் – 1 சதுர துண்டங்களாக வெட்டவும்,
இஞ்சி-பூண்டு விழுது – தலா 1 டீஸ்பூன்,
கரம்மசாலா – 1/2 டீஸ்பூன்,
ரீபைண்டு ஆயில் – தேவைக்கு,
தயிர் (துணியில் தொங்கவிட்ட கெட்டித் தயிர்) – 2 டேபிள்ஸ்பூன்,
கிரீம் – 1 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை – 1 டீஸ்பூன்,
வறுத்து பொடித்த சீரகத்தூள் – 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி, புதினா தழை விழுது, மாங்காய்தூள் – 1/2 டீஸ்பூன்,
ஓமம் – 1/2 டீஸ்பூன்,
கேசரி கலர் – ஒரு சிட்டிகை,
உப்பு, எண்ணெய்,
வெண்ணெய் – தேவைக்கு,
பாலக்கீரை விழுது – 1/2 கப்,
பச்சைமிளகாய் விழுது – 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பனீருடன் எல்லாவற்றையும் சேர்த்து கலந்து ஒரு வெண்ணெய் தடவிய பேக்கிங் டிரேயில் வைத்து 1/2 மணி நேரம் அப்படியே வைத்து அது மசாலாவுடன் ஊறியதும் பேக் செய்யவும் அல்லது மைக்ரோவேவ் அவனில் பச்சை வாசனை போகும்வரை வேக வைக்கவும் அல்லது தவாவில் வெண்ணெய் போட்டு கலந்து வைத்த ஹரியாலி பனீரை மிதமான தீயில் இரண்டு பக்கமும் பச்சை வாசனை போகும் வரை வேக விட்டு மீண்டும் திருப்பி போட்டு ஒவ்வொன்றாக எடுக்கவும். இதை அப்படியே சாப்பிடுவார்கள். கலர் பவுடருக்கு பதில் மஞ்சள் தூள் சேர்க்கலாம்sl3727

Related posts

சத்து நிறைந்த கொள்ளு கார அடை

nathan

சமோசா செய்வது எப்படி

nathan

சுவையான மொறு மொறு பூண்டு பக்கோடா…

nathan

இட்லி மஞ்சுரியன்

nathan

மட்டன் கொத்து பரோட்டா

nathan

உப்புமா

nathan

இன்ஸ்டன்ட் தயிர் வடை

nathan

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ராஜ் கச்சோரி

nathan

மைசூர், மங்களூர், உருளைக்கிழங்கு போண்டா… வேண்டாமே!

nathan