28.9 C
Chennai
Monday, May 20, 2024
201609121208106215 hair Problem solving amla oil SECVPF
தலைமுடி சிகிச்சை

கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் நெல்லிக்காய் எண்ணெய்

நெல்லிக்காய் எண்ணெயால் தலைமுடி பிரச்சனைகள் நீங்குவதோடு, தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும்.

கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் நெல்லிக்காய் எண்ணெய்
இன்றைய காலத்தில் தலைமுடிக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காமல், தலைமுடி வலுவிழந்தும், ஆரோக்கியமிழந்தும் உள்ளது. நெல்லிக்காய் எண்ணெயால் தலைமுடி பிரச்சனைகள் நீங்குவதோடு, தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும்.

தலைமுடி அதிகம் உதிர்ந்தால், ஷாம்புவுடன் சிறிது நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பயன்படுத்துங்கள். இதனால் ஸ்கால்ப் வறட்சியடைந்து, முடி உடைவது தடுக்கப்படும்.

தலைக்கு ஷாம்பு பயன்படுத்திய பின், நீரில் சிறிது நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து பின் அலச வேண்டும். இதனால் முடி பட்டுப் போன்று இருக்கும்.

தலைக்கு ஷாம்பு பயன்படுத்திய பின், சிறிது நெல்லிக்காய் எண்ணெயை முடியின் முனைகளில் தடவ வேண்டும். இதனால் முடி வறட்சியடைவதை தடுக்கலாம்.

நெல்லிக்காய் எண்ணெய் நரைமுடியைப் போக்கும் திறன் கொண்டது. மேலும் பழங்காலத்தில் இருந்து நரைமுடியைப் போக்க நெல்லிக்காய் எண்ணெய் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆகவே நெல்லிக்காய் எண்ணெயைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து வர, முடி நரைப்பதைத் தடுக்கலாம்.

பொடுகுத் தொல்லையால் அடிக்கடி அவஸ்தைப்படுபவர்க்ள, நெல்லிக்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், பொடுகு வருவதை முற்றிலும் தடுக்கலாம்.

நெல்லிக்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தினமும் முடியின் முனைகளில் தடவி வர, பாதிக்கப்பட்ட முடியின் முனைகள் சரிசெய்யப்பட்டு, முடி வெடிப்பது தடுக்கப்படும்.201609121208106215 hair Problem solving amla oil SECVPF

Related posts

உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா எண்ணெய் தேய்க்கும்போது நாம் என்ன தவறு செய்கிறோம்? அப்ப இத படிங்க!

nathan

கூந்தல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த மிளகாயை எண்ணெயில் கலந்து தேய்ச்சா முடி நீளமா வளருமாம்…

nathan

தலைமுடி பராமரிக்கும் முறை

nathan

இரண்டே வாரங்களில் தலைமுடி அடர்த்தியாக வளர ஈஸி டிப்ஸ்…

nathan

தலைக்கு ஹென்னா போடுவீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டுமா…..பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…இளநரையை போக்கும் மூலிகை தைலம்

nathan