28.4 C
Chennai
Wednesday, May 15, 2024
cauliflower pakora 22 1469188804 1
சிற்றுண்டி வகைகள்

காலிஃப்ளவர் பக்கோடா

மாலை வேளையில் மொறுமொறுப்பாக டீ, காபியுடன் ஏதேனும் சாப்பிட நினைக்கும் போது, வீட்டில் காலிஃப்ளவர் இருந்தால், அதனைக் கொண்டு பக்கோடா செய்து சாப்பிடுங்கள். இது 10 நிமிடத்தில் செய்யக்கூடியது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது.
சரி, இப்போது அந்த காலிஃப்ளவர் பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் – 3 கப் (வேக வைத்தது)
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – சுவைக்கேற்ப
கடலை மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 1/4 கப்
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் காலிஃப்ளவரைத் தவிர, அனைத்து பொருட்களையும் போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் சூடானதும், அதில் காலிஃப்ளவரைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், காலிஃப்ளவர் பக்கோடா ரெடி!!!cauliflower pakora 22 1469188804

Related posts

கடலைப்பருப்பு ஸ்வீட் கேசரி

nathan

பன்னீர் இனிப்பு போளி செய்வது எப்படி

nathan

மிலி ஜுலி சப்ஜி

nathan

வயிறு கோளாறுகளை குணமாக்கும் பூண்டு துவையல்

nathan

சத்து நிறைந்த சிறுதானிய முருங்கை கீரை அடை

nathan

கோதுமை – சிவப்பு அவல் சப்பாத்தி

nathan

ரவைக் கிச்சடி

nathan

கோதுமை வெஜ் ஸ்டஃப் கொழுக்கட்டை

nathan

பிரட் பீட்ரூட் பால்ஸ்

nathan