201704150857130140 banana flower dal masiyal vazhaipoo kootu SECVPF
சிற்றுண்டி வகைகள்

சத்து நிறைந்த வாழைப்பூ பருப்பு மசியல்

வாழைப்பூவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. பெண்கள் தினமும் வாழைப்பூ சேர்த்து கொள்வது நல்லது. இன்று வாழைப்பூவை வைத்து மசியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்து நிறைந்த வாழைப்பூ பருப்பு மசியல்
தேவையான பொருட்கள் :

வாழைப்பூ – 1 (சிறியது),
தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
வேக வைத்த துவரம் பருப்பு – ½ கிண்ணம்,
புளி – எலுமிச்சை அளவு,
உப்பு – தேவையான அளவு,

தாளிக்க :

எண்ணெய் – 2 தேக்கரண்டி,
கடுகு – 1 டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய் வற்றல்- 3.

செய்முறை :

* வாழைப்பூவை சுத்தம் பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

* புளியை கொஞ்சம் தண்ணீரில் ஊற போட்டு கெட்டியான புளித்தண்ணீர் எடுத்து வைக்கவும்.

* பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, மஞ்சள் போட்டு வேக வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அதில் வேக வைத்த வாழைப்பூவை போட்டு வதக்கவும்.

* இப்போது கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை வாழைப்பூவுடன் சேர்த்து கொதிக்க விடவும்.

* பிறகு வேக வைத்த துவரம் பருப்பையும் போட்டு ஒரு கொதி வந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.

* வாழைப்பூ மசியல் ரெடி.201704150857130140 banana flower dal masiyal vazhaipoo kootu SECVPF

Related posts

மணத்தக்காளித் துவையல் செய்ய…..

nathan

சிறுதானிய போண்டா தினை – சோளம்

nathan

கம்பு தோசை..

nathan

முட்டை பணியாரம்!

nathan

ப்ராக்கோலி கபாப்

nathan

சத்தான சுவையான ஓட்ஸ் – கேரட் ஊத்தப்பம்

nathan

ராஜஸ்தான் ஸ்பெஷல் மிஸ்ஸி ரொட்டி

nathan

ஜீரண சுரப்பிகளின் செயலை அதிகரிக்க செய்யும் இஞ்சி துவையல்

nathan

பனீர் பாஸ்தா

nathan