31.4 C
Chennai
Tuesday, May 28, 2024
9J1mPLh
சிற்றுண்டி வகைகள்

மட்டன் கொத்து பரோட்டா

என்னென்ன தேவை?

மட்டன் கொத்துக்கறி – 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் – 10,
பச்சைமிளகாய் – 1,
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
தாளிக்க சோம்பு,
பிரிஞ்சி இலை – சிறிது,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிது,
முட்டை – 1,
பரோட்டா – 2,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, கொத்துக்கறி சேர்த்து நன்கு வேக விடவும். முட்டையில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு நுரைக்க அடித்து தோசைக்கல்லில் ஆம்லெட்டாக ஊற்றி துண்டுகள் போட்டு, கொத்துக்கறி கலவையில் சேர்த்து நன்கு கொத்தவும். பின்பு பரோட்டா துண்டுகளையும் கொத்துக்கறி கலவையில் போட்டு கிளறி இறக்கவும். கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.9J1mPLh

Related posts

சோயா தட்டை

nathan

கேழ்வரகு கொழுக்கட்டை

nathan

பிரட் பகோடா :

nathan

ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை

nathan

சுவையான நூடுல்ஸ் பக்கோடா

nathan

தந்தூரி பேபி கார்ன்

nathan

மாலை நேர டிபன் சேமியா கிச்சடி

nathan

அவல் வேர்க்கடலை பக்கோடா…

nathan

பெப்பர் இட்லி

nathan