29.5 C
Chennai
Tuesday, May 21, 2024
25 1500984607 4
தலைமுடி சிகிச்சை

தலையிலிருக்கும் பேனை ஒழிக்க சில எளிய வீட்டுக் குறிப்புகள்

தலையை சரியாக பராமரிக்கவில்லையென்றால் பல பிரச்சனைகள் வருவதுடன் இன்னொன்றும் சேர்ந்தே வரும். பேன். வேகமாக வளரக்கூடியது அத்துடன் ஒரே நேரத்தில் பல முட்டைகளையிட்டு பல்கி பெருகிடும். இதனால் பெரிய பிரச்சனைகள் ஏதும் இல்லையென்றாலும் பல நேரங்களில் சங்கடங்களை ஏற்படுத்திடும்.
பேன் மற்றும் ஈறு என்று சொல்லப்படும் பேன் முட்டைகளை அழிக்க சில குறிப்புகள்.

பூண்டு : பூண்டு வாசம் பேன்களுக்கு ஒத்துக் கொள்ளாது. அவை பேன்களை அழித்திடும். பத்து பூண்டுகளை எடுத்து தோல் சீவி மைய அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இரண்டு டீ ஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து தலைவதும் தேய்த்துக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைக்குளித்துவிடலாம்.

பாதாம் : பாதாம் பருப்பை ஊற வைத்து அதனை அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் ஹேர் பேக்காக போட்டு ஒரு மணி நேரம் வரை ஊற வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவிடலாம். வாரம் ஒரு முறை இப்படிச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உப்பு : பேனை ஒழிக்க சரியான தேர்வு இந்த உப்பு, உப்பு மற்றும் அத்துடன் வினிகர் கலந்து கொள்ளுங்கள். அதனை தலை முழுவதும் அப்ளை செய்து ஷவர் கேப் கொண்டு க்ளோஸ் செய்திடுங்கள். சுமார் இரண்டு மணி நேரங்கள் கழித்து ஷாம்பு போட்டு தலைக்குளித்துவிடலாம். மூன்று நாட்களுக்கு ஒரு முறை இப்படிச் செய்யலாம்.

வேப்பிலை : வேப்பிலையின் கசப்பு பேனை ஒழித்திடும். வேப்பிலையை அரைத்து தலையில் ஹேர் பேக்காக போட்டு அரை மணி நேரம் ஊறிய பின்னர் தலைக்கு குளிக்கலாம். அல்லது வேப்ப எண்ணெயும் தேங்காய் எண்ணெயும் சமமாக கலந்து தலையில் தேய்த்து தலைக்கு குளிக்கலாம்.

வெந்தயம் : இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை ஊற வைத்திடுங்கள் இரண்டு மணி நேரம் கழித்து அதனை அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன் நான்கு ஸ்பூன் தேங்காய் பால் கலந்து தலைக்கு தடவிடுங்கள். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் தலைக்கு குளித்திடலாம்.

25 1500984607 4

Related posts

இளநரை போக்கும் கறிவேப்பிலை

nathan

பெண்களே கொரோனா தொற்றுக்குப் பிறகு அதிகமாக முடி உதிர்கிறதா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

கூந்தலை பராமரிக்கும் வழி முறைகள்

nathan

ஆயுர்வேத முறையில உங்க முடி வளர்ச்சியை அதிகரிங்க சூப்பர் டிப்ஸ்!

nathan

தலைமுடியின் வளர்ச்சியை தூண்டும் வெந்தயக்கீரை

nathan

முடி உதிர்வை தடுக்க இந்த 3 பொருட்களைக் கொண்டு ஒரு சிகிச்சை முறை தெரியுமா!!

nathan

உங்க முடி அடிக்கடி சிக்கு ஆகுதா? இதோ சில வழிகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… தலைமுடிக்கு ஷாம்புவை பயன்படுத்தும்போது நீங்க செய்யும் தவறுகள் என்னென்ன தெரியுமா?

nathan

தலையில் புண்கள் மற்றும் கட்டிகள் வருவதற்கான காரணம் என்ன? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan