Bread Fizza
சிற்றுண்டி வகைகள்

பிரெட் பீட்சா

மிகவும் வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும் இதை குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு, மாலை நேரம் சாப்பிட இதை நாம் செய்து தரலாம். 10-15 நிமிடங்களில் எளிதாகச் செய்து விடக்கூடிய ஸ்நாக் இது. சூடாகப் பரிமாற சுவைத்துச் சாப்பிடும் உங்கள் வீட்டு செல்லங்கள்.

தேவையான பொருட்கள்:

பிரட் – 6 ஸ்லைஸ்

தக்காளி சாஸ் / பாஸ்தா சாஸ் / கெட்ச் அப் – 1/2 கப்

ஜலபீனோ துண்டுகள் – காரம் தேவைக்கேற்ப

உப்பு – தேவையான அளவு

துருவிய மொஸரெல்லா சீஸ் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

பிரட்டில் லேசாக வெண்ணெய் தடவி, தோசைக் கல்லில் அல்லது ஓவனில் வைத்து டோஸ்ட் செய்யவும். பிரட்டின் இருபுறமும் திருப்பிவிட்டு, லேசான பொன்னிறமாக டோஸ்ட் செய்து, பிரட் துண்டுகளை தனியே எடுத்து வைக்கவும்.

Bread Fizza

பிரட்டின் மீது சிறிது தக்காளி சாஸ்/ பாஸ்தா சாஸ்/ கெட்ச்அப் வைத்து, தட்டையான கரண்டியால் சாஸ் பிரட் முழுவதும் பரவும்படி தேய்த்து விடவும்.

இதன் மீது தேவையான அளவு ஆலப்பேன்யோவை துண்டுகளாக நறுக்கி மேலே தூவி நிரப்பவும்.

தேவையான அளவு உப்பை மேலே தூவிக் கொள்ளவும்.

கடைசியாகத் துருவிய சீஸை மேலே பரவலாகத் தூவி விடவும்.

இதே போல் எல்லா பிரட் துண்டுகளுக்கும் செய்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

ஓவனை 250 ° – ல் வைத்து ப்ரீ-ஹீட் செய்யவும். (5 நிமிடங்கள்)

ஓவனில் கவனமாக பிரட் துண்டுகளை வரிசையாகப் பரப்பி வைக்கவும். 5 நிமிடங்கள் வரை பேக் செய்து பின் வெளியே எடுக்கவும்.

(சீஸ் நன்றாக உருகிய பின் வெளியே எடுக்கவும்.)

சூடாகப் பரிமாறவும்.

நறுக்கிய குடைமிளகாய், சோளம் (corn), ஆலிவ் சேர்த்தும் இதே போல் பிரட் பிஸ்ஸா செய்யலாம்.

Related posts

சத்து நிறைந்த கேரட் – கம்பு அடை

nathan

சில்லி கார்லிக் நூடுல்ஸ் : செய்முறைகளுடன்…!

nathan

உப்பு அதிகரித்துவிட்டால்

nathan

கார்ர பெண்டலம் பிட்டு

nathan

எளிமையாக செய்யக்கூடிய புல்கா ரொட்டி

nathan

தினை உப்புமா அடை

nathan

தாளித்த கொழுக்கட்டை

nathan

சுவையான… அரிசி சாத கட்லெட்

nathan

கரட் போளி செய்வது எப்படி?

nathan