31.9 C
Chennai
Tuesday, May 21, 2024
08 1470630582 3sleepwithonefootoutoftheblanketandsee
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா ஏன் கால்கள் போர்வைக்கு வெளியே இருக்கும்படி உறங்க வேண்டும் ?

இந்த உலகில் யார் அதிகம் புண்ணியம் செய்தவர் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள், நிறைய பணம், நல்ல உத்தியோகம், ஆடம்பர வீடு, கார், பைக் எல்லாம் வைத்திருப்பவர்களையா? இல்லவே இல்லை, யார் ஒருவன் தன் வேலைகளை எல்லாம் முடித்த பிறகு, இரவு படுத்த இரண்டாவது நிமிடத்தில் ஆழமான, நிம்மதியான உறக்கம் பெறுகிறானோ அவன் தான் புண்ணியம் செய்தவன்.

இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்? உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

உடல் தட்பவெப்ப நிலை! முதலில் நமது உடலை பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். நமது உடலில் தட்பவெப்பதிற்கு ஏற்ப தான் நமது உடல் விழிப்பான் எச்சரிக்கைகளை தரும்.

குளுமை! நமது உடல் குளுமையாக இருக்கும் போது நல்ல உறக்கம் வரும். கால் பாதங்களில் முடிகள் இல்லாததாலும், பாதத்தின் சருமம் மிகவும் மென்மையானது என்பதாலும், இது எளிதாக குளுமையடையும் கருவியாக இருக்கிறது.

போர்வைக்கு வெளியே! இதனால் தான் படுக்கும் போது கால்களை போர்வைக்கு வெளியே இருக்கும் படி வைத்துக் கொள்ள கூறுகின்றனர். இதனால், நீங்கள் சீக்கிரமாக உறங்க முடியும். பாதத்தின் சருமம் வாஸ்குலர் கட்டமைப்பு கொண்டுள்ளது. இது உடலின் சூட்டை வேகமாக குறைக்க செய்கிறது.

உடல்நலக் குறைபாடு! காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைபாடு ஏற்படும் போது உடலின் தட்பவெப்ப நிலை அதிகரிப்பதால் தான் சரியாக உறங்க முடியாமல் போகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வு! இரவு உறங்கும் போது கால்களை போர்வைக்கு வெளியே இருக்கும் படி வைத்துக் கொள்வதால் வேகமாகவும், ஆழமான நிம்மதியான உறக்கம் வரும் என நியூயார்க் பத்திரிக்கையில் வெளியான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளியிங்கள்! இதுமட்டுமின்றி, இரவு உறங்குவதற்கு முன்னதாக நீங்கள் குளித்து விட்டு சென்று படுத்தாலும் நல்ல உறக்கம் வரும். இதற்கு காரணமும் உடல் குளுமை அடைவது தான்.

குளிர் பானங்கள் வேண்டாம்! இதற்காக யாரும் குளிர் பானங்கள் பருகிவிட்டு படுக்க செல்ல வேண்டும் என்றில்லை. உண்மையில், நீங்கள் மிக குளுமையான ட்ரிங்க்ஸ் குடிப்பதால் உடலின் தட்பவெப்ப நிலை அதிகரிக்க தான் செய்யும்.

குளுமையான உணவுகள்! குளுமையான தன்மையுள்ள இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இதை கோடைக்காலத்தில் பின்பற்றலாமே தவிர, குளிர் காலத்தில் வேண்டாம். குளிர் காலத்தில் குளிர்ந்த உணவுகள் உண்பதால் சளி, காய்ச்சல், தொண்டை பிரச்சனை போன்றவை எளிதாக தொற்றிக் கொள்ளும். முக்கியமாக இரவு நேரங்களில் குளிர்ந்த உணவுகள் அறவே ஒதுக்கிவிடுங்கள்.08 1470630582 3sleepwithonefootoutoftheblanketandsee

Related posts

நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள் செய்ய வேண்டியவை..!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்

nathan

ஜப்பானியர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான ரகசியம் என்னவென்று தெரியுமா?

nathan

ஹெல்த் ஸ்பெஷல் சில வீட்டு வைத்தியம்… இருமல் பிரச்சனையில் இருந்து தப்பிக்க

nathan

பெண்களே தொரிந்துகொள்ளுங்கள்….எந்தெந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கணும் தெரியுமா?

nathan

வித்தியாச தேநீர் வகைகளைப் பற்றி இங்கே பார்ப்போம்!…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க… ஆபரணங்களை அணிந்து கொள்வதற்கான அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியிலான காரணங்கள்!!

nathan

கர்ப்பிணிகளுக்கு இரத்த சோகை வருவதைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்

nathan

கொழுப்பை குறைக்கும் தனியா பொடி

nathan