28.4 C
Chennai
Thursday, May 16, 2024
chik02
ஆரோக்கிய உணவு

செய்முறைகளுடன் ஜிஞ்சர் சிக்கன்

தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத சிக்கன் – கால் கிலோ
வெங்காயம் – 2
இஞ்சி – பெரிய துண்டு
தக்காளி – 2
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் – 1
புளித்த தயிர் – சிறிதளவு
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெண், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :
தக்காளி, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைக்கவும்.

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில்வைத்து சூடானதும வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், தனியா தூள்,மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடவும்.

அதனுடன் சிக்கனை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி, தயிர் சேர்த்து கிளறி விடவும்.

எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விட வேண்டும்.

இறுதியில் கரம்மசாலா தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி பரிமாறவும்.chik02

Related posts

ஆய்வில் தகவல்! கிரீன் டீயில் கொரோனாவை எதிர்க்கும் மருத்துவ குணங்கள்

nathan

பழைய சோறு சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா?

nathan

உங்களுக்கு தெரியுமா சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தாலே பல நோய்கள் தீர்ந்து விடும்!

nathan

அன்றாடம் தானியங்களை சாப்பிடுவதற்கான சில அற்புத வழிகள்!!!

nathan

கீரை துவட்டல்

nathan

மறந்து போன மருத்துவ உணவுகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…உயிரை பறிக்கும் வெல்லம்…இந்த நிறத்தில் இருந்தால் பேராபத்து?

nathan

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?

nathan

சுவையான பாகற்காய் சட்னி

nathan