recipe பன்னீர் மின்ட் கறி
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா பாலக் பன்னீர் ரெசிபி எவ்வாறு செய்வது???

தேவையான பொருட்கள் :

கீரை – 200 கிராம் (2 கெட்டுகள்)

தண்ணீர் – 1 கப்

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் +2 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் – 1 கப் (நறுக்கியது)

தக்காளி – 1 கப் (சதுர வடிவில் நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 டீ ஸ்பூன் (நறுக்கியது)

முழு முந்திரி பருப்பு – 4

உப்பு – 1 டீ ஸ்பூன்

சிவப்பு மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்

ப்ரஷ் க்ரீம் – 2 டேபிள் ஸ்பூன் +அலங்கரிக்க

பன்னீர் துண்டுகள் – 1 கப்

 

செய்முறை:

ஒரு வடிகட்டும் பாத்திரத்தில் கீரையை எடுத்து 2-3 முறை அலசி தண்ணீரை வடிகட்டி கொள்ளவும். அதை இப்பொழுது ஒரு ப்ரஷ்ஷர் குக்கரில் சேர்க்கவும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரை வேக வைக்கவும் அதே சமயத்தில் அடுப்பில் கடாயை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும் பிறகு அதனுடன் நறுக்கிய தக்காளி பழத்தை சேர்க்க வேண்டும். நன்றாக கிளறவும் பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும் இப்பொழுது முந்திரி பருப்பை சேர்த்து நன்றாக ஒரு நிமிடம் வதக்கவும் குக்கரின் மூடியை திறந்து வேக வைத்த கீரையை ஒரு 10 நிமிடங்கள் ஆற வைக்கவும் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்ஸி சாரில் போடவும் நன்றாக வழுவழுப்பாக அரைத்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும் இப்பொழுது அரைத்த கலவையை அதில் கொட்டி நன்றாக வதக்கவும் இப்பொழுது 1 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும் இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் ப்ரஷ் க்ரீம் சேர்த்து கலக்கவும்.

 

இப்பொழுது மூடியை மூடி ஒரு நிமிடங்கள் சமைக்கவும் அதை வேக விடவும் இப்பொழுது வேக வைத்த கீரையை மிக்ஸி சாரில் சேர்க்கவும் நன்றாக வழுவழுப்பாக மிதமான பதத்தில் அரைத்து வைத்து கொள்ளுங்கள் இப்பொழுது அரைத்த கீரையை கடாயில் உள்ள மசாலா கலவையுடன் சேர்க்கவும்.

மறுபடியும் மூடியை மூடி ஒரு நிமிடம் வரை சமைக்கவும் பிறகு மூடியை திறந்து நறுக்கி வைத்த பன்னீரை கறியில் சேர்க்கவும் பிறகு அதை ஒரு பெளலிற்கு மாற்றி ப்ரஷ் க்ரீம் கொண்டு அலங்கரிக்கவும் சூடாக பரிமாறவும்.recipe பன்னீர் மின்ட் கறி

Related posts

தெரிஞ்சிக்கங்க…இந்த உணவு மற்றும் பானங்களை சாப்பிட்டால் உங்களுக்கு கடுமையான வயிற்று வலி வருமாம்…

nathan

முட்டை கெட்டுவிட்டதா? இல்லையா? என கண்டுபிடிக்கும் வழிமுறைகள் !!!

nathan

உங்களுக்கு தெரியுமா கருஞ்சீரகத்தை இப்படி உட்கொண்டால் பல பிரச்சனைகளை தீர்க்க முடியும் ..!!

nathan

ஆப்பிளை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்… தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கல்லீரலை பதம் பார்க்கும் உணவுகள்! தெரிந்துகொள்வோமா?

nathan

சத்தான கம்பு உருண்டை செய்வது எப்படி

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம்..இடுப்புச் சதை குறையனும்னா, கண்ணை மூடிட்டு கண்டிப்பா இந்த 7 உணவு வகைகளுக்கு நோ சொல்லனும்!

nathan

வயிற்றில் நார்த்திசுக்கட்டி உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

nathan

பலமுறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!

nathan