32.8 C
Chennai
Sunday, May 19, 2024
Armpits.
சரும பராமரிப்பு

உங்களுக்கு அக்குள் ரொம்ப கருப்பா இருக்கா..?அப்ப இத படிங்க!

அக்குள் பகுதிகள் கருமை நிறமாகவுள்ளதா? உங்களால் பொது இடங்களில் விருப்பமான ஆடைவகைகளை அணிந்து இருப்பதில் பல சங்கடங்கள் உள்ளதா? உண்மையில் இது பலருக்கும் உள்ள பிரச்சினையே.

இந்தக் கருமை நிறத்திற்கு முக்கிய காரணம், தொடர்ச்சியாக முடி அகற்றுதல், அதற்காக பயன்படுத்தும் கிறீம் வகைகள், வியர்வை, அக்குல் பகுதிக்கு காற்றோட்டம் இல்லாமை, இறந்த கலங்கள் படிவடைதல், அல்ககோல் அடங்கிய டியோட்ரண்ட்கள் பயன்படுத்தல் போன்றவையே.
கருமையான அக்குள் பகுதிகளால் ஆரோக்கியத்திலும் பல பிரச்சினைகள் வருவதனால் அதனை தகுந்த முறையில் சிகிச்சை அளிப்பது அவசியமானது.

அக்குளின் கருமை நிறத்தைப் போக்குவது எப்படி?

1. சீனியும் தேங்காய் எண்ணெய் ஸ்கிறப்.
ஒரு தேக்கரண்டி சீனியுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து அக்குள் பகுதிகளில் தேய்த்து வருவதனால், இறந்த கலங்கல் நீங்கி கருமைன நிறம் அகன்று விடும்.

2. உருளைக் கிழங்கு.
உருளைக்கிழங்கை சிறுதுண்டுகலாகவோ அல்லது சாறாகவோ தேய்த்து 20 ந்ப்மிடங்களின் பின்பு நீரினால் கழுவவும்.

3. எலுமிச்சப்பழம்.
எலுமிச்சப்பழத்தை வெட்டி அக்குள் பகுதிகலில் நன்றாக தேய்த்து 10 நிமிடங்களின் பின்பு கழுவவும். இதனை தொடர்ந்து செய்வதனால் வெண்மை நிறம் கிடைப்பதுடன் பக்டீரியா தொற்றுக்கல் ஏற்படாமல் பாதுகாக்கும்.

4. பால்.
பாலில் உள்ள விட்டமின் மற்றும் கனியுப்புக்கள் அக்குள் பகுதியை மென்மையாகவும் வெள்ளை நிறமாகவும் மாற்றும். பாலினை எடுத்து 5 நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்து 20 நிமிடங்களின் பின்பு கழுவினால் போதுமானது. இதனை தினமும் 2 தடவைகள் பின்பற்றலாம்.

5. தேன்.
தேனை தனியாகவோ அல்லது பால், கற்றாளை, தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்துப் பயன்படுத்துவது சிறந்தது. இதனால் அக்குள் பகுதிகலில் உள்ள கருமை நிறத்தைப் போக்க முடியும்

6. தக்காளி.
முடிகளை அகற்றிய பின்பு தக்காளிச் சாற்றை அக்குள் பகுதிகளில் தேய்த்து பின்பு நீரினால் கழுவவும். வாரத்திற்கு 2 அல்லது 3 தடவைகள் செய்வது சிறப்பானது.

7. வெள்ளரிக்காய்.
வெள்ளரிக்காய் சாற்றுடன் சிறிதளவு மஞ்சள் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து அக்குளின் கறுப்பான பகுதிக்கு பூசி வருவதனால் தீர்வு கிடைக்கும்.

8. சமையல் சோடா.
சமையல் சோடா சிறிதளவு எடுத்து அதில் நீரிக் கலந்து அக்குள் பகுதிகலில் ஸ்கிறப் போல பயன்படுத்தி, சிறிது நேரத்திற்குள் நீர்னால் கழுவினால் போதுமானது. இதனை தொடர்ந்து செய்து வருவது சிறப்பானது.

Armpits.

Related posts

மினுமினுப்பான கழுத்துக்கு…. Skin Care Tips for a discoloured Neck

nathan

இறந்த செல்களை நீக்கும் ஸ்க்ரப்பிங்

nathan

சருமம் காக்கும் சரக்கொன்றை…

nathan

இவைகள் இளமையிலேயே சருமத்தை சுருங்கச் செய்யும் என்பது தெரியுமா?

nathan

பியூட்டி – நைட் க்ரீம்

nathan

முகத்தில் உள்ள பருக்களை முழுவதுமாக விரட்டி அடிக்க ஒரு அற்புதமான வழி!…

sangika

மூக்கின் அழகை மறைக்கும் தழும்பை போக்க டிப்ஸ்.—-அழகு குறிப்புகள்

nathan

கருப்பாக இருப்பவர்களுக்காக சில டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா சரும அழகிற்கு நெய்யை எப்படி பயன்படுத்தலாம்

nathan