30.3 C
Chennai
Sunday, May 19, 2024
Screenshot 2019 05 25 39e955f91bd0b135143d6e22df863581 webp WEBP Image 600 × 450
சரும பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! வெயிலுக்கு சும்மா ஜில்லுனு இருக்கிற பவுடரை எப்படி நாம வீட்லயே தயாரிக்கலாம்?

வெயில்… காலைப்பொழுதில் மரங்களின் இலை வழியே விழும்போது இனிமையான அனுபவத்தைக் கொடுப்பது. அதுவே சூரியன் உச்சிக்கு வரும்போது வெளியே நடமாட இயலாமல் வெயில் கொளுத்தியெடுக்கிறது. வியர்வை, கசகசப்பு என்று மனநிலையையே மாற்றிவிடுகிறது கோடை.

கோடை வெயிலிலிருந்து சருமத்தை காத்துக்கொள்ள எத்தனையோ முயற்சிகளை செய்கிறோம். என்ன பொருள்களெல்லாம் கலந்திருக்கிறது என்பதே தெரியாமல் பவுடர், கிரீம் என்ற பூசிக்கொள்வதைக் காட்டிலும் நாமே வீட்டில் நமக்கு விருப்பமானவற்றை கலந்து பவுடர் செய்தால் எப்படியிருக்கும்? முயற்சித்து பாருங்களேன்…
வெயிலுக்கு சும்மா ஜில்லுனு இருக்கிற பவுடரை எப்படி நாம வீட்லயே தயாரிக்கலாம்?
நீங்களே செய்யுங்க…

உடம்பில் பூசிக்கொள்வதற்கு சந்தையில் கிடைக்கும் பவுடர்கள் பெரும்பாலும் மெக்னீசியம் சிலிகேட்டான ‘டால்க்’ கை பயன்படுத்திய செய்யப்படுபவைதாம். இது நம் சுவாசமண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. சமீபத்திய ஆய்வுகள் புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் இதற்கு இருப்பதாக தெரிவிக்கின்றன.

இது போன்று உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, நமக்கு நன்கு தெரிந்த மூலப்பொருள்களை பயன்படுத்தி நாமே ஃப்ளோரல் பாடி பவுடர் தயாரித்து பயன்படுத்துவது நல்லதல்லவா!

வெயிலுக்கு சும்மா ஜில்லுனு இருக்கிற பவுடரை எப்படி நாம வீட்லயே தயாரிக்கலாம்?
மூலிகைப் பொடிகள்

அரோரூட் என்னும் கூவை கிழங்கு பொடி, கார்ன்ஸ்டார்ச் என்னும் சோளமாவு, கெயோலின் அல்லது ஃப்ரெஞ்ச் கிரீன் என்னும் களிமண் (கிளே) மற்றும் அரிசி மாவு ஆகியவை ஃப்ளோரல் பாடி பவுடருக்கான முக்கிய சேர்க்கை பொருளாக பயன்படுத்தத்தக்கவை.

கிளே என்னும் களிமண்ணுக்கு ஈரத்தை உறிஞ்சக்கூடிய இயல்பு உண்டு. சருமத்திலுள்ள ஈரப்பதத்தை இவை அகற்றும். ஆகவே, அரோரூட் அல்லது கார்ன்ஸ்டார்ச், இரண்டில் ஒன்றை முக்கிய பொருளாக கொண்டு அதனுடன் உங்கள் சரும நிறத்திற்கேற்ற கிளே (களிமண்) சேர்த்து ஃப்ளோரல் பாடி பவுடர் தயாரிக்கலாம்.

ஒரு பங்கு அரோரூட் அல்லது கார்ன்ஸ்டார்ச் பவுடருடன் ½ அல்லது ஒரு பங்கு கிளே சேர்க்கவும். இதனுடன் உங்கள் தேவைக்கேற்ற மூலிகைகளை பொடி செய்து கலந்து உங்களுக்கேற்ற ஃப்ளோரல் பாடி பவுடரை தயாரித்து பயன்படுத்தலாம்.

வெயிலுக்கு சும்மா ஜில்லுனு இருக்கிற பவுடரை எப்படி நாம வீட்லயே தயாரிக்கலாம்?
பயன்மிகு பத்து மூலிகைகள்

மலர்கள் மற்றும் மூலிகைகளை பயன்படுத்தி உடலுக்கு பூசக்கூடிய ஃப்ளோரல் பாடி பவுடர் தயாரித்தால், அது நறுமணம் மிக்கதாக இருப்பதோடு மூலிகையின் நற்பலன்களையும் உடலுக்குத் தரும். நுண்கிருமிகளிள் செயல்பாட்டு மற்றும் உடல் அழற்சியையும் இவை தடுக்கும். சில பூக்களுக்கும் மூலிகைகளுக்கும் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய பண்பும் உண்டு.

கலெஞ்ஜுலா (Calendula) என்னும் பானை சாமந்தி அல்லது செண்டுப் பூ: உடல் அழற்சியை தடுக்கும்; காயத்தை ஆற்றும்; கிருமி தொற்றாமல் தடுக்கும்; சருமம் தளராமல் காக்கும்.

கமாமில் (Chamomile) என்னும் சாமந்தி: உடல் அழற்சியை தடுக்கும்; காயத்தை ஆற்றும்; இதமளிக்கும். ரோஜா இதழ்கள்: கிருமி தொற்றாமல் தடுக்கும்; சருமம் தளராமல் காக்கும்; புண்களை ஆற்றும்; நறுமணம் வீசும்.

லாவெண்டர் என்னும் சுகந்தி: நறுமணம் வீசும்; கிருமி தொற்றாமல் தடுக்கும்; மனதுக்கு உற்சாகம் அளிக்கும்; ஈரப்பதம் அளிக்கும். எல்டர் ஃபிளவர்: சம்புகஸ் வகையைச் சேர்ந்த இந்தப் பூக்கள் கிருமி தொற்றாமல் தடுக்கும்; சருமம் தளராமல் காக்கும்; உடல் அழற்சியை தடுக்கும்; ஈரப்பதம் அளிக்கும்

வெயிலுக்கு சும்மா ஜில்லுனு இருக்கிற பவுடரை எப்படி நாம வீட்லயே தயாரிக்கலாம்?
மலைவேம்பு பூக்கள்:

குளுமை தரும்; இதமளிக்கும்; கிருமி தொற்றாமல் தடுக்கும்; சருமம் தளராமல் காக்கும்; ஈரப்பதம் அளிக்கும்.

வயலட் மற்றும் செங்கருநீலப்பூ என்னும் பான்ஸி பூக்கள்: குளுமை தரும்; புண்களை ஆற்றும்; உடல் அழற்சியை தடுக்கும்.

மிளகுக் கீரை: குளுமை தரும்; கிருமி தொற்றாமல் தடுக்கும்; மூளையை தூண்டக்கூடியது.

நீலமுள்ளி: நறுமணம் வீசும்; கிருமி தொற்றாமல் தடுக்கும்; அதிக வியர்வையை தடுக்கும்.

காம்ஃப்ரே இலைகள் மற்றும் வேர்: ஈரப்பதம் அளிக்கும்; சருமம் தளராமல் காக்கும்; கிருமி தொற்றாமல் காக்கும்; காயங்களை ஆற்றும்

வெயிலுக்கு சும்மா ஜில்லுனு இருக்கிற பவுடரை எப்படி நாம வீட்லயே தயாரிக்கலாம்?
ஃப்ளோரல் பாடி பவுடர்

தேவையானவை

அரரூட் மாவு, கார்ன்ஸ்டார்ச், அரிசி மாவு, கெயோலின் அல்லது ஃப்ரெஞ்ச் கிரீன் கிளே ஏதாவது ஒன்று – 2 கப்
கிளே, ஒரு கப் ஏனைய மாவில் ஒரு கப் என்றும் பயன்படுத்தலாம்.
மேலே கூறப்பட்டவற்றில் உங்களுக்குத் தேவையான மூலிகை – ½ அல்லது 1 கப் அளவு

செய்முறை

அரைக்கப்பட்ட மூலிகை மற்றும் மூலப்பொருளின் மாவை கட்டிகள் இல்லாமல் உடைக்கவும். அவற்றை சலித்து சிறுகட்டிகளை பிரிக்கவும். பின்னர் கட்டிப்படுவதை தடுக்க சிறுகரண்டி அளவு அரிசியை சேர்க்கவும். இதை ஒரு கலனில் சேகரிக்கவும்.

பயன்படுத்துவதற்கு மூன்று எளிய தயாரிப்பு முறைகள்
மேலே கூறிய பொருள்களை பயன்படுத்தி நீங்களே ஃப்ளோரல் பாடி பவுடரை தயாரிக்க விரும்பினால் கீழ்க்காணும் வழிமுறைகளை கையாண்டு பார்க்கலாம்.

வெயிலுக்கு சும்மா ஜில்லுனு இருக்கிற பவுடரை எப்படி நாம வீட்லயே தயாரிக்கலாம்?
கோடை காலத்திற்கான பவுடர்

கோடை வெப்பத்தினால் ஏற்படும் அசௌகரியத்தை தவிர்த்து, சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அகற்றி, உடல் அழற்சியிலிருந்து பாதுகாக்கும்

தேவையானவை

அரரூட் மாவு அல்லது கார்ன்ஸ்டார்ச் என்னும் சோளமாவு: 1 கப்
ஃப்ரெஞ்ச் கிரீன் கிளே – ½ கப்
காம்ஃப்ரே வேர் அல்லது இலையின் பொடி, பானை சாமந்தி, செண்டு பூ இதழ்கள் – ஒவ்வொன்றும் ¼ கப்

செய்முறை

மூலிகைகளை பொடியாக திரிக்கவும். வேர்கள் கடினமாக இருக்கும். ஆகவே அவற்றை திரிக்கும்போது கவனம் தேவை. பொடியாக்கப்பட்ட மூலிகை மற்றும் முக்கிய சேர்க்கைப் பொருளை ஒன்றாக கலக்கவும். கட்டிப்படாமல் அதை உடைக்கவும். சல்லடை பயன்படுத்தி அரித்து கலனில் சேகரிக்கவும்.

வெயிலுக்கு சும்மா ஜில்லுனு இருக்கிற பவுடரை எப்படி நாம வீட்லயே தயாரிக்கலாம்?
ரோஸி லாவெண்டர்

நறுமணமுள்ள ஃப்ளோரல் பாடி பவுடர் தேவைப்படின் ரோஸி லாவெண்டரை தயாரியுங்கள். இதன் மணம் உங்களை மயக்கும்.

தேவையானவை

அரரூட் மாவு அல்லது கார்ன்ஸ்டார்ச் – 1 கப்
கெயோலின் கிளே – 1 கப்
ரோஜா இதழ் பொடி – ¾ கப்
லாவெண்டர் மொட்டின் பொடி – ¼ கப்

செய்முறை

மலர் மற்றும் மொட்டுக்களை தேவைப்பட்டால் நன்கு திரிக்கவும். ரோஜா இதழ் மற்றும் லாவெண்டர் மொட்டுக்களின் பொடி, அரரூட் மாவு, கெயோலின் கிளே ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் இட்டு கட்டிப்படாமல் உடைக்கவும். இதை சல்லடை மூலம் சலித்து கலனில் சேர்க்கவும்.

வெயிலுக்கு சும்மா ஜில்லுனு இருக்கிற பவுடரை எப்படி நாம வீட்லயே தயாரிக்கலாம்?
சூப்பர் கூலர் பவுடர்

அதிக வெப்பமான நாள்களில் உடல் குளுமைக்கு இந்த ஃப்ளோரல் பாடி பவுடரை பயன்படுத்தலாம்.

தேவையானவை

அரரூட் மாவு அல்லது கார்ன்ஸ்டார்ச் என்னும் சோளமாவு – 1 கப்
கெயோலின் கிளே – 1 கப்
மிளகுக் கீரையின் பொடி – ¼ கப்
மலைவேம்பு பூவின் பொடி – ¼ கப்
வயலட் மற்றும் பான்சி பூ அல்லது ரோஜா இதழ்களின் பொடி – ¼ கப்

செய்முறை:

தேவையான மூலிகைகளை நன்கு பொடித்துக்கொள்ளவும். மூலிகை பொடிகள் மற்றும் முக்கிய சேர்க்கை மாவு இவற்றை கலந்து கட்டியாகாமல் உடைக்கவும். சல்லடையை பயன்படுத்தி சலித்து எடுத்து கலனில் சேர்க்கவும்
இவற்றை நீங்களாகவே தயாரித்து தேவைக்கேற்றபடி பயன்படுத்தலாம்; கோடைக்காலத்தில் இவை உடலுக்கு இதமளிக்கும்.Screenshot 2019 05 25 39e955f91bd0b135143d6e22df863581 webp WEBP Image 600 × 450

source: boldsky.com

Related posts

வேக்சிங் செய்தால் வரும் சரும எரிச்சலை போக்க வழிகள்

nathan

அழகு உங்கள் கையில்

nathan

அழகாக இருக்க எளிய வழி,

nathan

பட்டுப் போன்ற முடி வேண்டுமா.. பளபளப்பான சருமம் வேண்டுமா?ஒரு வாழைப்பழம் போதும்

nathan

வியர்வை நாற்றதை விரட்டும் இயற்கை வழிகள்…!

nathan

பெண்களே…. அந்தரங்க பகுதி ரொம்ப கருப்பா இருக்கா? எளிய நிவாரணம்

nathan

உங்கள் குளியல் சோப் பற்றி தெரியுமா?

nathan

சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்!!

nathan

எளிய முறையில் வீட்டில் செய்யலாம் மெனிக்யூர்

nathan