31.9 C
Chennai
Tuesday, May 21, 2024
yiuyioi
ஆரோக்கிய உணவு

ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம்,

பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன.

ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயனக் கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாகச் செயல்படுகிறது. ஆர்கானிக் கலவை இரும்புசத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது.

ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் இரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. இரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.

தேவையற்ற கொழுப்புச் சத்து குறைக்கப்பட்டு HDL அதிகரிக்கிறது. சோடியம் குறைக்கப்பட்டு இரத்த அழுத்தம் குறைய உதவுகிறது.

அதிக இரத்தப் போக்கைத் தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது. செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது.
yiuyioi
இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால் ரத்தச் சர்க்கரை குறைய உதவுகிறது. சோடியம் உடம்புக்குப் பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.

ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது. மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள். சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது.

குடற்கிருமிகளை அழிக்க உதவுகிறது. குழந்தைகளுக்குப் பேதி கண்டால் ஆப்பிள் பழத்தை ஆவியில் வேகவைத்து பிசைந்து கொடுத்தால் வயிற்றுப் போக்கு குணமாகும். ஏன் பெரியவர்களுக்கும் கூட இது பொருந்தும்.

இதய நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.

Related posts

சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிட வேண்டிய காய்கறிகள்!!!

nathan

அல்சரை குணமாக்கும் பீட்ரூட்

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் செய்யக்கூடாத 10 விஷயங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா இவர்கள் வாழைப்பழத்தை தொட்டு கூட பார்க்க கூடாதாம்!

nathan

சூப்பர் டிப்ஸ்! இரத்தத்தை எளிதில் சுத்திகரிக்கும் சில இயற்கை பானங்கள்…!!

nathan

தக்காளி சாலட்

nathan

நம் ஆரோக்கியத்தை காக்கும் மண் பாண்ட சமையல்

nathan

தெரிஞ்சிக்கங்க…காலை வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டிய சாப்பிடக்கூடாத பானங்கள் என்ன தெரியுமா.?

nathan

ஆண்கள் விளாம்பழம் சாப்பிடலாமா?

nathan