immu
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடால் போதும்!

கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளை ஆக்கிரமித்துள்ள இந்த சமயத்தில் தாய்மார்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

குழந்தைகளின் ஆரோக்கியத்தை கவனித்து, சரியான உணவை உண்ணச் செய்ய வேண்டியது தாய்மார்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.

எந்தவித தொற்றும் குழந்தையை அண்டாமல் இருக்க குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

இதனால் எப்பேர்பட்ட வைரஸிடமிருந்து குழந்தைகளை பாதுகாத்து கொள்ளலாம்.

அந்தவகையில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • சிவப்பு குடை மிளகாய் உணவுடன் சேர்த்து கொடுக்கலாம். ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி-யை விட இது அதிகம். மேலும் இதில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது சருமத்திற்கும் கண்களுக்கும் நல்லது.
  • உங்கள் குழந்தைகளுக்கு சிட்ரஸ் பழங்களை கொடுக்கலாம். ஏனெனில் சிட்ரஸ் பழங்கள் வெள்ளை இரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. இதில், மிக முக்கியமான வைட்டமின் சி நிறைந்துள்ளது.
  • குழந்தைகளுக்கு பெர்ரி கொடுப்பது நல்லது. ஏனெனில் அவை உயிரணு சேதத்தை ஏற்படுத்துவதை கட்டுப்படுத்துகிறது.
  • குழந்தையின் உணவில் இறைச்சியின் சேர்ப்பது அவசியம். உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான இரும்பு மற்றும் துத்தநாகத்தை சேர்க்கின்றன.immu
  • பருப்பு வகைகள் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். பீன்ஸ், சுண்டல் மற்றும் பயறு போன்ற உணவுகளை அவர்களின் உணவைத் திட்டமிடும்போது சேர்க்க வேண்டியது அவசியம்.
  • தயிர் எடுத்துக்கொள்வது குழந்தைக்கு நல்லது. அவை புரோபயாடிக் கூறுகள் நிறைந்தவை மற்றும் உங்கள் குழந்தையின் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன.
  • கேஃபிர் தயிர் போலவே தோற்றமளிக்கும்.இதில், புரோபயாடிக்குகளிலும் நிறைந்துள்ளது. இது உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
  • அவகோடா பழம் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிரம்பியுள்ளன. இவை இரண்டும் குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு முக்கியம். காலை உணவின் போது அல்லது மதிய உணவு நேரத்தில் ஒரு சாண்ட்விச்சில் அவகோடா பழத்தை சேர்த்து கொடுக்கலாம்.
  • சூரியகாந்தி விதைகள் குழந்தைகளுக்கு சரியான ஆரோக்கியமான சிற்றுண்டி. ஏனெனில் இவற்றில் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக இருக்கின்றன. மேலும், வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகின்றன.
  • குழந்தையின் உடல் ஆரோக்கியமாக இருக்க ஒவ்வொரு நாளும் ஒரு சில பாதாம் பருப்புகளை சாப்பிட கொடுங்கள். இந்த உணவுகள் உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Related posts

உடலை குளிர்ச்சியாக்கும் புளியந்தளிர்

nathan

நீரிழிவு நோயாளிகளுக்கான கோடைக்கால சாலட் ரெசிபி -ஹெல்த் ஸ்பெஷல்

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில முக்கிய உணவுகள்!

nathan

பிராய்லர் சிக்கனும் அதனால் ஏற்றப்படும்கொடிய சிக்கலும்!!

nathan

பாதரசம் எந்தெந்த மீன்களில் அதிகளவு இருக்கிறது தெரியுமா?

nathan

சர்க்கரை நோயாளி வெறும் வயிற்றில் காபி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?

nathan

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?

nathan

இதை காலையிலும், மாலையிலும் சாப்பிட்டால், தைராய்டு பிரச்சனை முற்றிலும் குணமாகும் தெரியுமா?

nathan

சுவையான சத்தான பேபி கார்ன் சூப்

nathan