625.0.560.350.160.300.0

அதிரவைக்கும் புள்ளி விவரம்! சீனாவின் நரித்தந்திரம் அம்பலம்… கொரோனாவின் சூழ்நிலையை எப்படி சாதமாக்குகிறது?

உலக நாடுகளுக்கு கொரோனாவை ஏற்றுமதி செய்த சீனா தற்போது, அதில் இருந்து லாபம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டது என்றே கூறலாம்.

ஆசியா உட்பட அனைத்து நாடுகளை சேர்ந்தவர்களும், தற்போது சீனாவிற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் சீனர்களுக்கு கொரோனா தொற்றை ஏற்படுத்திவிடுவார்கள் என்ற காரணத்தை சீன அரசு சொல்கிறது.

தற்போது பாதிக்கப்பட்ட பல நாடுகளுடன் Face Mask,Hand Gloves,ventilator போன்றவற்றை இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்து, அதை பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய சீனா பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது.


சீனர்களின் நரித்தந்திரத்தைப் பற்றி வெளியில் இருப்பவர்கள் சொல்லும் போது, அதை நம்பாமல் இருக்கலாம். ஆனால் அதுவே சீனாவை சேர்ந்தவர்கள் கூறியிருந்தால்? 1999-ஆம் ஆண்டு அமெரிக்காவை அழிக்க, சீனாவின் இரண்டு படை தளபதிகள் எழுதிய புத்தகம் தான் அண்ட்ரூ ஸ்டெக்டர் வார் பேர், அதாவது அமெரிக்காவை ஒருநாளும் நம்மால் ஆயுதங்களை வைத்து அழிக்க முடியாது என்பது சீன தளபதிகளுக்கு தெரியும்.

அமெரிக்காவின் பொருளாதாரத்தை அழிப்பது மட்டுமே, சீனா அமெரிக்காவை வெல்ல சரியான திட்டம் என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 20 ஆண்டுகள் கழித்து சீனா அந்த புத்தகத்தில் இருப்பது போன்று, கொரோனாவை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர்.

கொரோனாவை பயன்படுத்தி, உலகப்பொருளாதாரத்தில் சீனா, கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது என்றே கூறலாம்.

இது வெறும் கணிப்பு மட்டும் கிடையாது, சில உதாரணங்கள் இருக்கின்றன.

தற்போது சீனாவில் இருக்கும் நிலை என்ன?
உலகநாடுகள் முடங்கி கிடக்கின்றன, இந்த நேரத்தில் சீனா தன்னுடைய சுற்றுலாத்தளங்களை திறந்துவிட்டுள்ளது. மால்கள், ஹோட்டல்கள் என அனைத்தும் திறக்கப்பட, மக்களின் இயல்பு வாழ்க்கையும் திரும்பிவிட்டது.625.0.560.350.160.

பெரும்பாலான தொழிற்சாலைகள் இயக்கத்திற்கு வந்துவிட்டன. சீனா அரசு 344 பில்லியன் டொலர்களை பொருளாதாரத்தில் இருந்து மீட்க முதலீடு செய்துள்ளனர்.

ஒரு நாடு மீட்க முதலீடு செய்வதில் என்ன தவறு?
கொரோனா உருவான சீனாவில் மொத்தமே 81,000 பேர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதுவே அமெரிக்காவில் தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் ஒரு லட்சத்திற்கும் மேல், அதே சீனாவின் எல்லைக்குள் இருக்கும் பீஜிங்கில், 2.15 கோடி மக்கள் வசிக்கின்றனர். அங்கு 569 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் மரணமடைந்துள்ளனர்.

சீனாவின் மற்றொரு முக்கிய நகரமான சாங்காயில் மக்கள் தொகை 2.4 கோடி, அங்கு பாதிப்பு 468 பேர் மட்டுமே, 5 பேர் மரணம், உலகிலே நெருக்கமாக மக்கள் தொகை வசிக்கும் நகரங்களில் சாங்காயும் ஒன்று, அங்கு இந்தளவிற்கு ஒரு குறைவான பாதிப்பு.

அதுவே அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கடுமையான பாதிப்பு, வுஹானில் இருந்து அண்டை மாவட்டங்களுக்கு பரவுவதை சீனா எவ்வளவு அழகாக கட்டுப்படுத்தினார்களோ, அதே போன்று மற்ற நாடுகளுக்கும் பரவியிருப்பதை கட்டுப்படுத்தியிருக்கலாமே? தன்னுடைய எல்லைகளை சீனா ஏன் முதலிலே கட்டுப்படுத்தவில்லை?

சீனாவில் பாதிக்கப்பட்ட நகரங்கள்
சீனாவில் பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலை பார்த்தால், அங்கிருக்கும் பொருளாதார மண்டலங்கள் அனைத்துமே பத்திரமாக காக்கப்பட்டிருக்கிறது. முக்கிய நகரங்களுக்கு எந்த ஒரு பாதிப்புமே இல்லாமல், சீனா எப்படி பார்த்து கொண்டது?625.0.560.350.160.300.0

இது எப்படி சாத்தியமானது? என்ற கேள்வில் மனதில் எழுந்து கொண்டே இருக்க, அதற்கு ஏற்ற வகை சீனா ஒரு விடை கொடுத்து கொண்டே இருக்கிறது.

கொரோனா சூழ்நிலையை சீனா தனக்கு சாதகமாக எப்படி பயன்படுத்துகிறது?
உலக நாடுகளுக்கு இப்போது நிச்சயம் என்ன தேவை என்று பார்த்தால், Face Mask,Hand Gloves,ventilator, சானிடைசர் போன்றவைகள் தான், இதை உற்பத்தி செய்யும் நோக்கில் தான் சீனா இப்போது களமிறங்கியுள்ளது.

புள்ளி விவரங்கள்
இந்த 2020-ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், சீனாவில் மட்டும், 8950 மாஸ்க் செய்யும் புதிய நிறுவனங்கள், உருவாக்கப்பட்டிருக்கிறது.

சீனாவின் ஒரு நாள் உற்பத்தி என்று பார்த்தால், 116 மில்லியன், டான் பாலிமர் இங்கிருக்கும் தொழிற்சாலைகளிலே இது தான் மிகப் பெரிய தொழிற்சாலை, சீனாவில் மாஸ்க் செய்யும் பங்குகளில் 40 சதவீதம் Dawn Polymer-யிடம் இருக்கிறது.

இந்த தொழிற்சாலை தான் உலகம் முழுவதிலும் பல நாடுகளுக்கு, மாஸ்க் செய்ய தேவைப்படும் மூலப் பொருட்களை ஏற்று மதி செய்கிறது.

கொரோனா ஏற்பட்ட இந்த காலக்கட்டத்தில், அனைத்து நிறுவனங்களின் பொருளாதாரமும் கீழே விழுந்துகொண்டிருக்கும் இந்த நிலையில், குறிப்பிட்ட(Dawn Polymer) கம்பெனியின் லாபம் மட்டும் 417 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட, அங்கிருக்கும் 9000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நல்ல செய்தியாக இருக்கிறது. ஏற்கனவே சீனாவில் இருந்த தற்போது உருவாக்கப்பட்டிருக்கும், அனைத்து நிறுவனங்களும், உலக நாடுகளிடம் வார்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றன.

சானிடைசர், கையுறை, வெண்டிலேட்டர், போன்றவைகளை தயாரித்து விற்பனை செய்ய, பல கோடி டொலர்கலுக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

வணிகத்தை ஆளுமை செய்வது ஒரு புறம் இருந்தாலும், மற்றொரு புறம் பொருளாதாரத்தை கைப்பற்றுவது, அந்த வகையில், உலகம் முழுவதிலும் இந்த காலக்கட்டத்தில், பல நிறுவனங்கள் நொறுங்கி போயுள்ளன.

அந்த நிறுவனங்களை விலை கொடுத்து, வாங்க சீனா துவங்கியுள்ளது. அவுஸ்திரேலியா அரசு, இப்போது பயந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதற்கு முக்கிய காரணம், சீனா பல மில்லியன் டொலர்கலை தற்போது, அவுஸ்திரேலிய நிறுவனங்கள் மீது முதலீடு செய்கின்றன. இது ஒரு காலக்கட்டத்தில், அவுஸ்திரேலியாவின் மொத்த பொருளாதாரமும்மே, சீனா நிறுவனங்களில் கையில் போய்விடுமோ என்ற அச்சம் தான்.

சீனாவின் நிறுவனங்களை தாண்டி, சீனா எல்லைக்குள் இருக்கும் மற்ற நாடுகளின் நிறுவனங்களும், பிப்ரவரி மாதமே இயங்க துவங்கிவிட்டனர். பி.எம்.டபில்யூ, பியாட், பாக்ஸ்கான் மற்றும் டெஸ்லா போன்ற நிறுவனங்கள், எல்லாமே சீன அரசின் உதவியோடு இயங்க துவங்கிவிட்டன.

இதன் மூலம் சீனாவில் உற்பத்தி மற்ற நாடுகளை விட அதிகரித்துள்ளது. இப்போது எங்கிருந்து ஏற்றுமதி, அதாவது உலகில் எங்காது ஒரு தேவை வேண்டும் என்றால், அது சீனாவில் இருந்து தான் போக வேண்டும்.

தன்னோடு நாட்டில் ஏற்பட்ட தொற்றை, அந்த நாட்டிற்குள்ளே கட்டுப்படுத்தாமல், வேறு நாடுகளுக்கு பரப்பி அதற்கு தேவையான மருத்துவ பொருட்களை அவர்களே உருவாக்கி, அதை மற்ற நாடுகளோடு விலை பேசி வியபாரம் செய்வதை தந்திரம் என்று கூறாமல், வேறு என்ன சொல்ல முடியும்? இதனால் சீனா மற்றும் ஒரு முறை தங்களை நிரூபித்துவிட்டார்கள் என்றே கூறலாம்.