Red Hibiscus

சூப்பர் டிப்ஸ்! அடர்த்தியான முடி வேண்டுமா? இந்த பூவில் எண்ணெய் செஞ்சு தினமும் யூஸ் பண்ணுங்க…

இன்று இளம் வயதிலேயே வழுக்கை பிரச்சனையை சந்திப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

அவர்களுக்கு செம்பருத்தி பூ நல்ல பலனை தரக்கூடும்.

செம்பருத்தி பூவை பயன்படுத்துவதற்கான காரணங்களை தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

ஆனால், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியவில்லையா? இப்போது நாம் அவற்றை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

செம்பருத்தி எண்ணெய்

ஆயில் மசாஜ், கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. செம்பருத்தி எண்ணெயில், ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

Red Hibiscus

இந்த எண்ணெயை பயன்படுத்தி வாரத்திற்கு 2 முறை முடிக்கு மசாஜ் செய்ய வேண்டும்.

 

செம்பருத்தி எண்ணெய் எப்படி செய்வது?
  • 10 செம்பருத்தி பூக்களையும், 10 செம்பருத்தி செடி இலைகளையும் எடுத்துக் கொள்ளவும்.
  • அதில் சிறிது நீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து சூடேற்றி, ஒரு கப் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை ஊற்றி சூடாக்கவும்.
  • பின்னர் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்க்கவும்.
  • இந்த கலவையை 2 முதல் 3 நிமிடங்களுக்கு நன்கு கிளறவும். இப்போது செம்பருத்தி எண்ணெய் தயார்.
  • இந்த எண்ணெயை பயன்படுத்தி ஸ்கால்ப்களில் மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் கழித்து ஹெர்பல் ஷாம்பூ பயன்படுத்தி குளித்திடவும்.