31.9 C
Chennai
Wednesday, May 22, 2024
unnam
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை!

இன்றைய இளைய தலைமுறையினரை அதிகம் பேர் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டவர்களுக்கு எழுதும் போது நடுக்கம், சோர்வு, களைப்பு, தலைவலி, நிலைத்தடுமாற்றம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

நரம்பு தளர்ச்சி பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகளை பார்ப்போம்:

அத்திப்பழம் நரம்பு தளர்ச்சி பிரச்சனைகளை குணப்படுத்தும். நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் வல்லமை அத்திப்பழத்திற்கு உண்டு. உடல் பலவீனத்தை சரி செய்து, உடல் பலத்தை அதிகரிக்கும் சக்தி அத்திப்பழத்தில் உள்ளது. வாரத்திற்கு 2 அல்லது 3 முறை அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் சக்தி பிரண்டைக்கு உண்டு. பிரண்டையை உணவில் அதிகம் சேர்த்து கொண்டால் நரம்பு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் மாதுளை பழத்தை அதிகம் சாப்பிட வேண்டும். மாதுளை பழம் உடல் சூட்டை தனிக்கும். உடலை வலுப்படுத்தும். தொடர்ந்து மாதுளை பழத்தை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சியை சரியாகும்.

நெல்லிக்கனியை தினமும் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை குணமாகும். மேலும் உடலுக்கு எந்த ஒரு நோய்யும் ஏற்படாது.

இரண்டு அல்லது மூன்று வெற்றிலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும். எந்த விதமான செரிமான பிரச்சனைகளும் ஏற்படாது. உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் சக்தி வெற்றிலைக்கு உண்டு.unnam

முருங்கைகீரைக்கு பொதுவாக உடலை வலுப்படுத்தும் சக்தி அதிகமாக உள்ளது. பலவிதமான நோய்களுக்கு கண்கண்ட மருந்து, உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும். முருங்கை கீரையை சமைக்கும் போது அதனுடன் சிறிதளவு முருங்கை பூவை சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இதனால் நரம்புகள் வலுப்படும்.

பேரிச்சை பழத்துடன் பால் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும். தேறாத உடல் கூட பேரிச்சையுடன் பால் கலந்து சாப்பிடு வந்தால் உடல் தேறும்.

Related posts

வெறும் வயிற்றில் கற்றாழை சாறை குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

nathan

பக்கவாதத்தை தடுக்கும் உணவுப் பழக்கங்கள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

தயிர் நெல்லிக்காய்

nathan

உயிரை பறிக்கும் விஷமாக மாறும் பழங்கள்… தெரிந்துகொள்வோமா?

nathan

பப்பாளிக்காயின் மருத்துவ பயன்கள்

nathan

வாரத்திற்கு நான்கு நாள் முந்திரி சாப்பிட்டால் என்ன நடக்கும்?தெரிஞ்சிக்கங்க…

nathan

பன்னீர் பற்றி கவனத்தில் வைக்க வேண்டியவை

nathan

வெங்காயத்தாளில் இதை சேர்த்து சாப்பிட்டால் போதும்! சூப்பர் டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த 10 வகை உணவுகள் உங்க தைராய்டு நோயை குணப்படுத்தும்!!முயன்று பாருங்கள்

nathan