29.7 C
Chennai
Friday, May 24, 2024
ggfhhbb
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

health tips ,, நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க பாலக் கீரையை இப்படி சாப்பிட்டாலே போதுமாம்…

கீரைகள் தான் இருக்கிறதிலயே ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறி என்று கூறலாம். விலை மலிவாக கிடைப்பதோடு ஊட்டச்சத்துக்கள், சுவை என ஒட்டுமொத்த நலன்களையும் கொடுக்கக் கூடியது. கீரைகளில் அதிக போலிக் அமிலம் காணப்படுகிறது.

இது நம்முடைய நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கவும், உணவில் புரதச்சத்தை கூட்டி உடல் வளர்ச்சி அடையவும் உதவுகிறது. கண் பார்வை, தோல் பராமரிப்பு, இரும்புச் சத்து குறைபாடு போன்ற பல விஷயங்களை களைய கீரைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். கீரைகளில் பல வகைகள் உள்ளன. இங்கே கீரையின் பல பயனுள்ள நன்மைகள் எவை என தெரிந்து கொள்வோமா.

இந்த கொரோனா போன்ற கால கட்டத்தில் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதற்கு கீரையை உணவில் தவறாமல் சேர்க்க வேண்டும். ஏனெனில் கீரை உங்க நோயெதிரிப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கீரைக் கடையல், பொரியல், ஸ்மூத்தி போன்ற உணவுகளை சேர்த்து வரலாம்.

கீரை ஒரு சிறந்த சீரான தசையை உருவாக்கக் கூடியது. இதில் போலேட், இரும்புச் சத்து, லுடின் உள்ளிட்ட சத்தான விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காணப்படுகின்றன. இதில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள், பைட்டோநியூட்ரியண்ட்ஸ், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதனால் இது நோய்கள் மற்றும் கிருமிகளை அழிக்க உதவுகிறது. பச்சை கீரையில் பொட்டாசியம், விட்டமின் சி காணப்படுவது உங்க நோயெதிரிப்பு சக்தியை மேம்படுத்தும்.
ggfhhbb
முட்டையுடன் கீரை

பொதுவாக ஆம்லெட் போட்டால் வெங்காயம், தக்காளி சேர்த்து பயன்படுத்தி இருப்பீர்கள். இது உங்களுக்கு வெறும் கலோரிகளை மட்டும் கொடுக்கலாம். ஆனால் முட்டையுடன் கீரையை சேர்த்து சாப்பிட்டால் கலோரியுடன் உங்களுக்கு ஊட்டச்சத்துக்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது உங்கள் பசியை அடக்க உதவி செய்யும். நீங்கள் எடை இழக்க விரும்பினால் உங்களுக்கு நல்ல பலன் அளிக்கும்.

பாலக்கீரை இந்திய உணவுகளில் பல்வேறு வழிகளில் பயன்படுகிறது. பருப்புகள் மற்றும் பயிறு வகைகளுடன் கீரையை கடைந்து நீங்கள் சாப்பிட்டு வரலாம். இது உங்களுக்கு சுவையானதாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற உதவி செய்யும். பயிறு வகைகளை பயன்படுத்துவது உங்க நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க உதவும். துத்தநாகம், இரும்பு மற்றும் லிம்போசைட்டு சத்துகளுடன் உங்க நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் தொற்று நோய்களை எதிர்த்து போரிட உதவுகிறது. கீரை சூப் போட்டு கூட நீங்கள் குடித்து வாருங்கள்.

Related posts

பிரேக் ஃபாஸ்ட் !

nathan

கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மன அழுத்தம் வரும்: எச்சரிக்கை ரிப்போர்ட்

nathan

சர்க்கரையை விட வெல்லம் நல்லது

nathan

உங்களுக்கு தெரியுமா நோய் எதிர்ப்பு சக்தி தரும் சிறு தானியங்கள்….

nathan

தைராய்டு… முட்டைகோஸ்… மோதிரம்?

nathan

பற்களுக்கு பின்னால் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கரையை போக்க சூப்பர் டிப்ஸ்!

nathan

வாழ்க்கை ரகசியங்கள் என்னென்ன என்று தெரியுமா உங்களுக்கு? அப்போ இத படியுங்கள்!…

sangika

தெரிஞ்சிக்கங்க…கால்சியம் சத்து குறைவதால் ஏற்படும் பாதிப்புகள்…!!

nathan

திராட்சையில் இப்படி ஒரு சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறதா?

nathan