28.9 C
Chennai
Monday, May 20, 2024
pregnant woman smiling
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தை குண்டா பிறக்கறது நல்லதா? ஒல்லியா பிறக்கறது நல்லதா?

ஒவ்வொரு பெற்றோரும் தனக்குக் கொழு கொழு குழந்தை பிறக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்.

அதனால் குழந்தை கருவில் இருக்கும் வரையிலும் தாய்க்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை நிறைய கொடுத்துக் கொடுத்து, வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ஊட்டி ஊட்டி வளர்க்கின்றனர். பிறக்கும் குழந்தைகளும் நல்ல ஆரோக்கியமாகவும் புஷ்டியாகவும் பிறக்கும்.

குழந்தைகள்

உலகம் முழுவதுமே அதனால் குண்டு குழந்தைகள் பிறப்பும் வளர்வதும் அதிகரித்து விட்டது. குழந்தை பிறக்கும் போது கொழுகொழுவென்று இருந்தால் நமக்கு பார்க்க நன்றாகத் தான் இருக்கும். மனதும் மகிழ்ச்சியாகத் தான் இருக்கும். ஆனால் அதன் பின்னால் இருக்கும் உண்மைகளைப் பற்றி நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்று. அதைப் பற்றி இங்கே விரிவாகக் காண்போம்.

குண்டு குழந்தைகள்

பொதுவாக வளர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் சோம்பலான வாழ்க்கை முறையை மேற்கொள்வதால் குழந்தைகள் குண்டு குழந்தைகளாகப் பிறப்பது அதிகரித்து விட்டது. ஆறு வயது முதல் 19 வயது வரையிலும் உள்ள குழந்தைகள் பெரும்பாலும் நன்கு குண்டாகவே வளர்ந்து விடுகிறார்கள்.

மலேசியாவில் மட்டும் கிட்டதட்ட கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் குண்டாக இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்து விட்டதாகப் புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. இதேநிலைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால், ஒவ்வொரு நான்கு வருடத்திற்குள்ளும் இரண்டு மடங்கு அதிகரிக்கும்.

இதய நோய்கள்

குண்டாக இருக்கும் குழந்தைகளுக்கு இதய நோய்கள், ரத்த அழுத்தம், ஆகியவை ஏற்படுகிற வாய்ப்புகள் அதிகரிக்கும். அதிலும் இந்த பிரச்சினைகள் ஆண் குழந்தைகளை விட, பெண் குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். இதுபற்றி ஒரு ஆய்வு நம்முடைய நாட்டில் நடத்தப்பட்டது.

ரத்த அழுத்தம்

அதன்படி குழந்தைகளுடைய உயரம், எடை, ரத்த அழுத்தம் ஆகியவற்றை அளவிடப்படும் போது, 15 சதவீத அளவு குழந்தைகளுக்கு மிக குண்டு குழந்தைகளாக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதுபோல் இந்த ஆய்வில் அதிர்ச்சி தரும் நிறைய தகவல்கள் கிடைக்கின்றன.

பெண் குழந்தைகள்

பெண் குழந்தைகள் பத்து வயதுக்கு முன்பாகவே பருவம் அடைநது விடுகிறார்கள். பெண் குழந்தைகளுக்கோ பின்னாளில் கர்ப்பப்பை நோய்களும் எலும்பு தேய்மானமும் மலட்டுத் தன்மையும் மாதவிடாய் கோளாறுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வு தெரிவித்திக்கிறது. அதனால் தான் மருத்துவர்கள் குண்டைக் குழந்தைகளை ஆரோக்கியமானது அல்ல என்று குறிப்பிடுகின்றனர்.

ஆண் குழந்தைகள்

அதேபோல் ஆண் குழந்தைகளுக்கு ஆணுறுப்பு வளர்ச்சியில்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குண்டாக இருக்கும் ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளைப் போல மார்பகங்களும் பெரிதாக இருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கும் மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் மன உளைச்சல்களும் ஏற்படுகிறது.

Related posts

இந்தியர்களுக்கு ஏன் அதிகமாய் சர்க்கரை நோய் அபாயம் ஏற்படுகிறது என்று தெரியுமா???

nathan

உங்களுக்கு தெரியுமா கண்களின் நிறத்தை வைத்து உங்கள் ஆரோக்கியத்தை பற்றி அறிவது எப்படி?

nathan

கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாத மாத்திரைகள்

nathan

சந்தன மரங்கள் அதிகம் பயன் தருபவை……

sangika

தீக்காயங்களுக்கு……!

nathan

வெள்ளை படுதல் பிரச்சனை உடனே தீர எளிதான பாட்டி வைத்தியங்கள்

nathan

முதுகு வலியை சரி செய்ய எளிய சிகிச்சைகள்

nathan

இரண்டாம் குழந்தையைப் பெற்றெடுக்க முடியவில்லையா?

nathan

இதமான, இனிமையான குட்டித் தூக்கம்… பலன்கள், பக்கவிளைவுகள்!

nathan