சரும பராமரிப்பு

தெரிந்துகொள்வோமா? சருமத்தில் எக்ஸிமா பிரச்சனையிருந்தால் இத ட்ரை பண்ணிப்பாருங்க!

சீரற்ற உலர்ந்த சருமம் நமக்கு இருந்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக வலியும் எரிச்சலும் சேர்ந்தே இருக்கும். எக்ஸிமா பொதுவாக இந்த சரும நோய் குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகிறது. அதே நேரத்தில் இது பெரியவர்களையும் பாதிக்க தவறுவதில்லை.முதலில் நமது வறண்ட சருமத்திலிருந்து இந்த எக்ஸிமா நோயை கண்டறிய வேண்டும். இவை பொதுவாக கை, கால், முழங்கால் மற்றும் முழங்கை போன்ற பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த எக்ஸிமாவால் பாதிக்கப்பட்டவரின் சருமம் சிவந்து வறண்டு அரிப்பு டன் காணப்படும். அரிப்பான பகுதியை சொறியும் போது சரும தடிப்புகள் ஏற்படும். சில நேரங்களில் இந்த சரும தடிப்புகள் அப்படியே கொப்பளங்களை உருவாக்கி விடும்.

இயற்கையாக இதனால் நமது சருமத்திற்கு அதிக பாதிப்புகள் ஏற்படாது. ஆனால் நிலைமை மோசமானால் சரும மருத்துவரை நாடுவது நல்லது. நீங்கள் எக்ஸிமாவின் ஆரம்ப நிலையில் இருந்தால் அதிலிருந்து உடனடியாக விடுபட இந்த இயற்கை முறைகளை பயன்படுத்தலாம்.

இந்த நோய் குறிப்பாக சுற்றுப்புற மாற்றத்திற்கேற்ப நமது நோயெதிர்ப்பு மண்டலம் செயல்பட்டு அரிப்பை உண்டாக்குவதால் ஏற்படுகிறது. அரிப்பை உண்டாக்கும் காரணிகளாக நாம் பயன்படுத்தும் சோப்பு, டிடர்ஜெண்ட் மற்றும் வாசனையான பொருட்களை சருமத்தில் அப்ளே செய்வதன் மூலம் ஏற்படலாம். ஏன் சில நேரங்களில் நம் மன அழுத்தம் கூட இதற்கு காரணமாக அமையலாம். பிறகு ஓரிரு வாரங்களில் இது சரியாகி விடும்.

எனவே நீங்கள் இந்த வீட்டு முறைகளை பயன்படுத்தி எக்ஸிமா பாதிப்பிலிருந்து விடுபடலாம். சரி வாங்க இப்பொழுது அதைப் பற்றி பார்ப்போம்.

உப்பில் நனைத்தல்

எப்சம் உப்பு நமது சருமத்திற்கு தேவையான மக்னீசிய த்தை அளிக்கிறது. கொஞ்சம் உப்பை வெதுவெதுப்பான நீரில் நனைய வைக்க வேண்டும். கண்டிப்பாக சூடான நீர் பயன்படுத்த கூடாது. இவை நமது சரும அரிப்பை மேலும் அதிகரித்து விடும். அரை மணி நேரம் உப்பை ஊற வைத்து குளிக்கவும்.

கெமோமில் குளியல்

கெமோமில் டீ நம்மை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. அதே நேரத்தில் இவை நமது சருமத்தையும் ரிலாக்ஸ் செய்கிறது. மேலும் எக்ஸிமாவிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. 5 கெமோமில் டீ பாக்கெட்களை நீங்கள் குளிக்கும் தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து வெது வெதுவெதுப்பாக ஆறியதும் குளிக்க வேண்டும்.

விட்டமின் ஈ எண்ணெய்

விட்டமின் ஈ ஆயில் எக்ஸிமா பாதிப்புகளை சீக்கிரம் ஆற்றுகிறது. இந்த ஆயிலை கொண்டு பாதிக்கப்பட்ட சரும பகுதியை மசாஜ் செய்யும் போது அரிப்பு குறைதல், விரைவில் ஆறுதல், தழும்பு இல்லாமல் ஆக்குதல் போன்றவற்றை செய்கிறது. நீங்கள் விட்டமின் ஈ மாத்திரைகளை வாங்கி எண்ணெய்யில் போட்டும் பயன்படுத்தலாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

டீ ட்ரி ஆயில்

இந்த எண்ணெய்யில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள்கள் உள்ளன. சில சொட்டுகள் டீ ட்ரி ஆயிலை மற்ற ஆலிவ் ஆயில் போன்ற ஆயிலுடன் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். அரிப்பிலிருந்து விடுதலை அளிக்கும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடார் வினிகர் அழற்சி மற்றும் எரிந்த சருமத்தை சரியாக்குகிறது. ஒரு காட்டன் பஞ்சில் வினிகரை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். நீங்கள் 2 பங்கு தண்ணீருடன் ஒரு பங்கு வினிகர் சேர்த்து அந்த விகிதத்திலும் பாதுகாப்பாக பயன்படுத்தலாம். வெடிப்புற்ற இரத்தம் வடியும் சருமத்தில் ஆப்பிள் சிடார் வினிகரை தடவாதீர்கள். இது மேலும் எரிச்சலை உண்டாக்கி விடும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் இயற்கையாகவே ஓமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளன. எனவே பாதிக்கப்பட்ட சருமத்தில் ஆலிவ் ஆயிலை தடவி வந்தால் அழற்சி எரிச்சல் குறையும். மேலும் சீரற்ற வறண்ட சருமம் சரியாகும். இந்த முறை உங்கள் தலையின் வறண்ட சருமத்திற்கும் உதவும்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லில் அதிகளவு அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. மேலும் இவை சருமத்திற்கு ஒரு கூலான தன்மையை கொடுக்கிறது. இதன் மூலம் சருமத்தை பாதுகாத்து ஆரோக்கியமாக்குகிறது.

பேக்கிங் சோடா

உங்களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்க விரும்பினால் பேக்கிங் சோடா ஒரு சிறந்த முறை. பேக்கிங் சோடா மற்றும் நீர் கலந்து அதை பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு ஈரமான துணியை கொண்டு தடவ வேண்டும். இவை பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள சரும பிரச்சினைகளை சரி செய்து விடும்.

லாவண்டர் எண்ணெய்

லாவண்டர் எண்ணெய்யை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும். இது சில்லென்று உணர்வை தரும். எரிச்சல் மற்றும் வறண்ட சருமத்தை நீக்கி அரிப்பினால் நமக்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்தை குறைத்து நல்ல தூக்கத்தை தரும்.

குளிர்ச்சி ஒத்தடம்

அரிப்பு மற்றும் சரும தடிப்புகளிலிருந்து ஐஸ் ஒத்தடம் உடனடி நிவாரணம் அளிக்கிறது. ஆனால் சரும கொப்புளங்களுக்கு இதை பயன்படுத்த கூடாது. வறண்ட சரும தடிப்புகளுக்கு மட்டுமே இதை பயன்படுத்தவும் இல்லையென்றால் நிலைமை மோசமாகி விடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button