சட்னி வகைகள்

சுட்ட கத்திரிக்காய் சட்னி செய்முறை

தேவையான பொருட்கள்:

* கத்திரிக்காய் – 2

* வரமிளகாய் – 4-5

* பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன்

* புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் கத்திரிக்காயை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த கத்திரிக்காயை நெருப்பில் நன்கு சுட்டுக் கொள்ள வேண்டும். பின்பு அதை குளிர்ந்த நீரில் போட்டு, பின் தோலை உரித்துக் கொள்ள வேண்டும்.

* அதன் பின் அந்த கத்திரிக்காயை கையால் நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

Sutta Kathirikkai Chutney Recipe In Tamil
* பின்பு வரமிளகாயை நெருப்பில் நன்கு சுட்டு, அதை கையால் உடைத்து, கத்திரிக்காயுடன் சேர்த்து பிசைய வேண்டும்.

* பிறகு புளியை நீரை ஊற வைத்து, கையால் நன்கு பிசைந்து, அதன் சாற்றினை மசித்த கத்திரிக்காயுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கிளற வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் இந்த கத்திரிக்காயை ஊற்றி சற்று கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு இறக்கினால், சுட்ட கத்திரிக்காய் சட்னி தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button