தொப்பை குறைய

ஏன் அடிவயிற்றுக் கொழுப்பை கரைப்பது கடினமாக உள்ளதென தெரியுமா?

உடலிலேயே அடிவயிற்றில் தான் கொழுப்புக்களின் தேக்கம் அதிகம் இருக்கும். அதே சமயம் அப்பகுதியில் தேங்கும் கொழுப்புக்களை எளிதில் கரைக்க முடியாமல் பலரும் தவிக்கின்றனர்.

பொதுவாக அடிவயிற்றில் கொழுப்புக்கள் தேங்குவதற்கு ஹார்மோன்கள், வயது, பாலினம் மற்றும் பல காரணிகள் உள்ளன. வயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகரித்தால், அதனால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை வாழ்நாள் முழுவதும் சந்திக்க வேண்டியிருக்கும்.

அதற்கு முன் அடிவயிற்றில் சேரும் கொழுப்புக்களைக் குறித்த உண்மைகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

உண்மை #1

பலர் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சேரும் கொழுப்பைக் குறைக்க முயற்சிப்பார்கள். ஆனால் அறிவியலோ எப்போதுமே ஒரு இடத்தில் தேங்கும் கொழுப்பை மட்டும் குறைப்பது முடியாத காரியம் என்று சொல்கிறது. மேலும் ஒரு இடத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகளால், உடலின் இதர பகுதிகளில் உள்ள கொழுப்புக்களும் குறைய ஆரம்பிக்கும்.

உண்மை #2

நம் உடலில் கொழுப்புக்கள் எங்கு தேங்க வேண்டும் என்பதை பாலினம் மற்றும் மரபணுக்கள் போன்றவை தான் தீர்மானிக்கிறது. அதில் பெரும்பாலும் முதலில் அடிவயிற்றில் தான் அதிகம் தேங்கக் செய்யும்.

உண்மை #3

அடிவயிற்றுக் கொழுப்பைக் கரைக்க வேண்டுமானால் டயட், உடற்பயிற்சி போன்ற இரண்டுமே முக்கியம். ஒருவேளை உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகம் இருந்தால், உடற்பயிற்சியை இன்னும் சற்று அதிகமாக செய்தால், கார்டிசோல் தொடர்பான கொழுப்பு பிரச்சனைகள் எழுவதைத் தடுக்கலாம்.

உண்மை #4

ஒருவர் அதிக மன அழுத்தத்துடன் இருந்தால், உடலில் கார்டிசோல் என்னும் ஹார்மோன் அதிகம் வெளியிடப்படும். மன அழுத்தம் தான் உள்ளுறுப்பு கொழுப்பிற்கு முக்கிய காரணம். மொத்தத்தில், அடிவயிற்றில் கொழுப்பு தேங்குவதற்கு மன அழுத்தமும் முதன்மையான காரணம் ஆகும்.

உண்மை #5

இன்சுலின் கூட அடிவயிற்றில் கொழுப்பு தேங்குவதற்கு ஓர் காரணமாகும். உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது, அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகமாக இருக்கும்.

உண்மை #6

ஒருவருக்கு உள்ளுறுப்பு கொழுப்பு இருப்பின், அதனால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளான டைப்-2 நீரிழிவு, இதய பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம், குறிப்பிட்ட வகையான புற்றுநோய்கள் போன்றவை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில் அடிவயிற்று கொழுப்பு அதிகம் தேங்கினால், அது ஒருவரை மெதுவாக அழிக்கும்.

உண்மை #7

ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களும் அடிவயிற்றில் கொழுப்பை தேங்கச் செய்யும். முக்கியமாக இறுதி மாதவிடாயை சந்தித்த பெண்களுக்கு தான் இந்நிலையினால் தொப்பை அதிகம் வரும்.

உண்மை #8

தொப்பை வர மற்றொரு முக்கிய காரணி வயது. சிலருக்கு வயது அதிகரிக்கும் போது தொப்பை வர ஆரம்பிக்கும். ஏனெனில் வயது அதிகமாகும் போது, உடலின் மெட்டபாலிசம் குறைந்து, அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கத்தை அதிகரிக்கும்.

30 1461997153 1 why belly fat is tough to lose

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button