சிற்றுண்டி வகைகள்

சத்தான கோதுமை ரவை பொங்கல் செய்முறை விளக்கம்

சத்தான கோதுமை ரவை பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான கோதுமை ரவை பொங்கல் செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை – ஒரு கப்,
வேக வைத்த பாசிப்பருப்பு – கால் கப்,
மிளகு (ஒன்று இரண்டாக உடைத்தது) – அரை டேபிள்ஸ்பூன்,
சீரகம் – அரை டேபிள்ஸ்பூன்,
வறுத்த முந்திரி – 8,
பட்டாணி – 1 டேபிள்ஸ்பூன்,
கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
நெய் – 4 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி – ஒரு துண்டு
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் கொஞ்சம் நெய் விட்டு கோதுமை ரவையை வறுத்து, தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

* அதனுடன் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும்.

* இன்னொரு கடாயில் சிறிது நெய் விட்டு… சீரகம், மிளகு போட்டு வறுக்கவும்.

* பிறகு அதில் பட்டாணி, இஞ்சி, கேரட் துருவல், முந்திரிப் பருப்பு போட்டு வதக்கி, கோதுமை கலவையில் கலந்து, மீதமுள்ள நெய் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

* சுவையான சத்தான கோதுமை ரவை பொங்கல் ரெடி.201605280714146358 how to make wheat rava pongal SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button