அழகு குறிப்புகள்

உச்சத்திற்கு செல்லும் அதிர்ஷ்ட ராசி யார்?

மேஷம்:

அசுவினி: நீண்டநாள் முயற்சி ஒன்று வெற்றியாகும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். பரணி: பணியிடத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். உறவினரால் உதவி உண்டாகும். கார்த்திகை 1: பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். உங்கள் செல்வாக்கு உயரும்.

ரிஷபம்:

கார்த்திகை 2, 3, 4: அரசு வழியிலான எதிர்பார்ப்பு நிறைவேறும். பகைவர் தொல்லை அகலும். ரோகிணி: வியாபாரத்தில் இருந்த பிரச்னையை சரி செய்வீர்கள். உங்கள் அணுகுமுறையால் ஆதாயம் அதிகரிக்கும். மிருகசீரிடம் 1, 2: எதிர்பார்த்த வரவு வரும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: தடைகளை சரி செய்து வெற்றி அடைவீர்கள் உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். திருவாதிரை: தொழிலில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். புதிய முயற்சி ஆதாயமாகும். புனர்பூசம் 1, 2, 3: துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் எண்ணத்தை நிறைவேற்றுவீர்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

கடகம்:

புனர்பூசம் 4: உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். பூசம்: எதிர்பார்த்த வருமானம் வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆயில்யம்: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

சிம்மம்:

மகம்: குழப்பத்திற்கு இடமளிக்காதீர்கள். திட்டமிட்ட செயல்கள் வெற்றியாகும். பூரம்: வேலைப்பளு அதிகரிக்கும். பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். உத்திரம் 1: அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். அதனால் சிக்கல் வரலாம்.

கன்னி:

உத்திரம் 2, 3, 4: பணத் தட்டுப்பாட்டின் காரணமாக முயற்சி இழுபறியாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அஸ்தம்: தொழிலில் எதிர்பார்த்த லாபம் காண முடியாமல் போகும். எதிர்பார்த்த வரவு தள்ளிப் போகும். சித்திரை 1, 2: பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களால் சங்கடம் வரலாம். கவனமுடன் செயல்படுங்கள்.

துலாம்:

சித்திரை 3, 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். சுவாதி: பணியாளர்களுக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். செல்வாக்கு உயரும். விசாகம் 1, 2, 3: நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அனுஷம்: தொழிலை விரிவு செய்வீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கேட்டை: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பழைய கடன் அடைபடும்.

தனுசு:

மூலம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். பூராடம்: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். உத்திராடம் 1: விலகிச் சென்ற உறவினர் உங்கள் உதவியை எதிர்பார்த்து மீண்டும் வருவர்.

மகரம்:

உத்திராடம் 2, 3, 4: செயல்களில் நெருக்கடி உண்டாகும். உதவி புரிவதாக சொன்னவர்களை சந்திக்க முடியாமல் போகும். திருவோணம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முயற்சி இழுபறியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். அவிட்டம் 1, 2: அலைச்சல் அதிகரிக்கும். வீண் பிரச்னைகள் ஏற்படலாம். பொறுமை காப்பது நல்லது.

கும்பம்:

அவிட்டம் 3, 4: உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். நினைத்ததை சாதித்து மகிழ்வீர்கள். சதயம்: தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் திறமையால் எண்ணியதை அடைவீர்கள். பூரட்டாதி 1, 2, 3: தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். வருவாயில் ஏற்பட்ட தடை விலகும்.

மீனம்:

பூரட்டாதி 4: பணியில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். உத்திரட்டாதி: நெருக்கடி விலகும். எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். ரேவதி: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button