உங்களுக்கு தெரியுமா மூளை மற்றும் இதயத்தை பலமாக்கும் செம்பருத்தி குளிர்பானத்தை தயாரிப்பது எப்படி?

செம்பருத்தி  கூந்தல் வளர்ச்சிக்கு   உதவுவது மட்டுமில்லாமல் ,  உடலுக்கும் ஆரோக்கியத்தை தர  உதவுகிறது. இயற்கையான முறையில்   செம்பருத்தியை வைத்து குளிர்பானம்   தயாரிப்பது எப்படி என்பதை இதில் காண்போம்.

தேவையான  பொருட்கள்:

செம்பருத்தி – 10 பூக்கள்

எலுமிச்சை – அரை  பழம்

வெல்லம்  – சிறிதளவு

தண்ணீர் – அரை  லிட்டர்

செய்முறை :

  • 10 செம்பருத்தி   மலர்களை சுத்தப்படுத்தி   எடுத்து வையுங்கள். இதழ்களை   மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில்   ஒரு பாத்திரத்தை   வைத்து அதில் அரை  லிட்டர் தண்ணீர் ஊற்றவும்.
  • தண்ணீர்   நன்கு சூடாகும்   போது அதில் செம்பருத்தி   இதழ்களை போடவும். இது நன்கு  கருஞ்சிவப்பு நிறமாக மாறும் போது,  இறக்கி வைத்துக் கொள்ளலாம்.
  • பின்பு   நன்கு பழுத்த   அரை எலுமிச்சம்   பழத்தை அதில் பிழிந்து   விடவும்.
  • சிறிது   நேரத்தில்   சிவப்பாக மாறி   விடும். பின்பு   இதை வடிகட்டி எடுத்து  வைத்துக் கொள்ளுங்கள்.
  • இந்த   தண்ணீரில்   தேவையான அளவு   வெல்லம் சேர்த்து  கலக்கிக் கொள்ளவும்.
  • இந்த   குளிர்ச்சியான  செம்பருத்தி நீரை இனி   நீங்கள் பருகலாம்.103128

அருந்தும்  முறை:

காலையில்   வெறும் வயிற்றில்  100 மிலி அளவு குடிக்க   வேண்டும். பின்பு உணவு உண்ட பின்பு  ஒரு மணி நேரத்திற்கு பிறகு 100 மிலி குடிக்கலாம்.

செம்பருத்தி  நீரின் மருத்துவ  பயன்கள்:

  • மூளைக்கு   சிறந்த மருந்தாகவும், மூளை   சுறுசுறுப்பாகவும் இருக்க இந்த  செம்பருத்தி தேநீர் உதவுகிறது.
  • இதை   தொடர்ந்து   குடித்து வந்தால்   இதயம் பலமாக இருக்கும்.
  • மார்பு   வலி குறைந்துவிடும்.
  • கருப்பை   தொடர்பான நோய்களை  குணப்படுத்த உதவுகிறது.
  • ரத்த ஓட்டத்தை   சீராக்க உதவுகிறது.
  • உடலை  குளிர்ச்சியுடன்   வைக்க உதவுகிறது. கண்  எரிச்சலை குணப்படுத்த உதவுகின்றது.
  • எனவே   இந்த செம்பருத்தி   நீரை நீங்களும் செய்து   குடித்து வாருங்கள் நண்பர்களே!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button