சரும பராமரிப்பு

குதிகால் வெடிப்பு ரொம்ப வலிக்குதா?இதோ எளிய நிவாரணம்

வெளியிடங்களுக்கு செல்லும் போது கால்களுக்கு அணிந்துள்ள காலணிகளை கழற்றி விட தர்ம சங்கடமாக உள்ளதா? நம்மில் பெரும்பாலானோர் நமது முகத்திற்கு கொடுக்கும் அளவில் பாதங்களுக்கு பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை. ஆனால் நமது உடலிலேயே நமது பாதங்களில் தான் எண்ணெய் சுரப்பிகளே இல்லை. எனவே தான் பாதங்கள் போதுமான எண்ணெய் பசையில்லாமல், விரைவில் வறட்சி அடைகின்றன. பாதங்களில் வறட்சி அதிகரித்தால், அது குதிகால் வெடிப்பிற்கு வழிவகுக்கும்.

Effective Kitchen Remedies For Painful Cracked Feet In Tamil
இது தவிர உடல் பருமன், பொருத்தமற்ற காலணிகளை அணிவது, நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பது, சரும வறட்சி மற்றும் சீரான பராமரிப்புக்களைக் கொடுக்காமல் இருப்பது போன்றவற்றாலும் குதிகால் வெடிப்புகள் ஏற்படும். ஆனால் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பல பொருட்கள் அன்றாடம் சந்திக்கும் பல பிரச்சனைகளைப் போக்குமளவில் ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளன. கீழே குதிகால் வெடிப்புகளைப் போக்க உதவும் சில சமையலறைப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இச்சத்துக்கள் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்கவும், சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. வாழைப்பழம் ஒரு நேச்சுரல் மாய்ஸ்சுரைசர். இதைக் கொண்டு பாதங்களைப் பராமரித்தால், பாதங்கள் வறட்சியின்றி ஈரப்பதத்துடன் இருக்கும்.

வாழைப்பழத்தைப் பயன்படுத்துவது எப்படி?

நன்கு கனிந்த 2 வாழைப்பழங்களை நன்கு மென்மையாக மசித்துக் கொள்ள வேண்டும். கனியாத பழங்களைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அதில் சருமத்திற்கு நன்மை விளைவிக்கும் அமிலம் இருக்காது. மசித்த வாழைப்பழத்தை பாதங்களில் நன்கு தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் பாதங்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு குறைந்தது 2 முறை படுப்பதற்கு முன் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

தேன்

தேன் ஒரு நேச்சுரல் ஆன்டி-செப்டிக் பொருளாக கருதப்படுகிறது. எனவே இது குதிகால் வெடிப்புகளை சரிசெய்யும். அதோடு, இதில் சருமத்தில் ஈரப்பசை அளிக்கும் பண்புள்ளதால், சரும வறட்சி தடுக்கப்படும். கூடுதலாக, தேன் சருமத்திற்கு புத்துயிர் அளிக்கவும் உதவுகிறது.

தேனை எப்படி பயன்படுத்துவது?

ஒரு கப் தேனை ஒரு வாளியில் உள்ள வெதுவெதுப்பான நீரில் கலந்து, அந்நீரில் கால்களை 20 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவாறு தேய்க்க வேண்டும். பின் பாதங்களை சுத்தமான நீரில் கழுவி, பாதங்களை உலர்த்த வேண்டும். அதன் பின் பாதங்களுக்கு மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும். இப்படி சில வாரங்கள் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வெஜிடேபிள் ஆயில்

சமையல் எண்ணெய்கள் எளிதில் சருமத்தால் உறிஞ்சக்கூடியவை. வெஜிடேபிள் ஆயிலில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள், சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, புதிய செல்களை உருவாக்குவதன் மூலம் குதிகால் வெடிப்புகளை சரிசெய்யும்.

வெஜிடேபிள் ஆயிலைப் பயன்படுத்துவது எப்படி?

முதலில் பாதங்களை நன்கு சுத்தமாக கழுவி உலர்த்திக் கொள்ள வேண்டும். பின் வெஜிடேபிள் ஆயிலை பாதங்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் கால்களில் சௌகரியமான சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வர, குதிகால் வெடிப்பு விரைவில் குணமாகும்.

வாஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் அசிட்டிக் பண்புகள் உள்ளன. இத்துடன் ஈரப்பசையூட்டும் பண்புகளைக் கொண்டு வாஸ்லின் சேர்த்து பயன்படுத்தும் போது, அது பாதங்களில் உள்ள வறட்சி தடுக்கப்படுவதோடு, குதிகால் வெடிப்புகளும் விரைவில் குணமாகும்.

பயன்படுத்துவது எப்படி?

முதலில் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஒரு பதினைந்து நிமிடம் ஊற வைத்து, பின் நன்கு பாதங்களை உலர்த்திக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு டீஸ்பூன் வாஸ்லின் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் மட்டுமின்றி, அதிகம் வறட்சியடையும் பகுதிகளிலும் தடவிக் கொள்ள வேண்டும். பின் கால்களில் உல்லன் சாக்ஸ் அணிந்து இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் பாதங்களைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்ய, குதிகால் வெடிப்புகள் மாயமாய் மறையும்.

அரிசி மாவு, தேன் மற்றும் வினிகர்

அரிசி மாவு ஒரு நேச்சுரல் எக்ஸ்போலியேட்டராக செயல்படக்கூடியது. அதாவது இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. அத்துடன் சிறிது தேன் சேர்த்துக் கொண்டால், குதிகால் வெடிப்பு குணமாகும். மேலும் வினிகரை சிறிது சேர்த்துக் கொண்டால், அது இறந்த செல்களை எளிதில் வெளியேற்ற உதவி புரியும்.

எப்படி பயன்படுத்துவது?

2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் 5-6 துளிகள் வினிகரை சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். பின் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் பத்து நிமிடம் ஊற வைத்து, பின் தயாரித்து வைத்துள்ள பேஸ்ட் கொண்டு பாதங்களை மென்மையாக தேய்க்க வேண்டும். அதன் பின் பாதங்களை கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button