சரும பராமரிப்பு

உடற்பயிற்சியின் போது செய்யப்படும் தவறுகளால் வரும் சருமப்பிரச்சனைகள் !!

ஆரோக்கியமான பழக்கங்களில் ஒன்று உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது. முறையான பயிற்சி பெற்ற நிபுணர்களின் கண்காணிப்பில் இதனைச் செய்வது தான் நல்லது.

ஒரு நாளை புத்துணர்சியுடன் துவங்க நீங்கள் செய்யும் உடற்பயிற்சி மற்றும் யோகாவின் போது சருமத்தைப் பற்றியும் கொஞ்சம் அக்கரை கொள்ளலாம்.

பவுண்டேஷன் : உடற்பயிற்சியின் போது வெறும் பேஸ் மட்டும் தான். பவுண்டேஷன் மட்டும் தான் என்று சொல்லி அதனை முகத்தில் போட்டுக் கொள்வதை தவிர்த்திடுங்கள்.அவை முகத்துவாரங்களில் அடைப்பை ஏற்படுத்தி வியர்வையை வெளியேற்றாமல் வைத்திருக்கும். முகத்தில் பரு மற்றும் ஆக்னீ வரவும் காரணமாகிவிடும்.உடற்பயிற்சியின் போது லேசாக மாய்ஸ்சரைசரும் ஆயில் ஃப்ரீ ஜெல்லும் பயன்படுத்தலாம்.

செண்ட் : பாடி ஸ்ப்ரே, செண்ட் என எதையும் உடற்பயிற்சியின் போது பயன்படுத்தாதீர்கள். இதில் சேர்க்கப்பட்டிருக்கும் மிக முக்கிய மூலப்பொருள் அலுமினியம், உடற்பயிற்சியின் போது வியர்வையோ கலந்து சரும பாதிப்புகளை ஏற்படுத்தும். இது தொடர்ந்தால் உடல் நலப்பிரச்சனையும் ஏற்படும்.

ஹை பன் : இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று முடியை ஒன்று சேர மேலே தூக்கி போடுவதை தவிர்த்திடுங்கள். இதனால் உங்கள் முடி சீக்கிரம் உடைந்து போகவும் வாய்ப்புகள் அதிகம்.

ஹேர் லாக் : உடற்பயிற்சிகளின் போது, ஃப்ரீ ஹேர் விடுவதையும் தவிர்த்திடுங்கள். போனி போட்டுக்கொள்ளுங்கள். ஹெட் பேண்ட் பயன்படுத்துங்கள். அதே போல உடற்பயிற்சியின் போது தலைக்கு எண்ணெய் வைத்துச் செல்வதை தவிர்த்திடுங்கள்.

முகம் : உடற்பயிற்சி செய்துவிட்டோ அல்லது ஜிம்மில் கருவிகளை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போதோ அடிக்கடி முகத்தை தொடாதீர்கள் இது உங்கள் முகத்தில் எளிதாக கிருமியை ஊடுருவச்செய்திடும்.

டவல் : ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் கட்டாயம் உங்களுக்கென தனியாக டவல் வைத்துக்கொள்ளுங்கள். தினமும் அதனை துவைத்து சுத்தப்படுத்துங்கள். இன்னொருவரின் டவலை பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். இது உங்கள் சருமத்திற்கு மட்டுமல்ல உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

பேபி வைப்ஸ் : ஜிம்மில் வேலை முடித்ததும் வேர்வையை துடைத்த பிறகு பேபி வைப்ஸ் கொண்டு முகத்தை துடைத்தெடுக்கலாம். முகம் தவிர கை, கால்கள்,கழுத்து போன்ற இடங்களில் துடைத்துக் கொள்ளுங்கள். உடனடி வேஷ் வாஸ் செய்தது போல இருக்கும். வியர்வையை துடைத்து அப்படியே விட்டிருந்தால் கிருமிகளும் உங்கள் சருமத்திலேயே தங்கி பாதிப்புகளை உண்டாக்கும்.

கண்டிஷனர் : ஸ்விம்மிங் செல்பவராக இருந்தால் நீச்சல் பயிற்சி முடிந்ததும் தலைக்கு லீவ் இன் கண்டிஷனர் போடுங்கள். தண்ணீரில் கலக்கப்பட்டிருக்கும் க்ளோரினால் தலைமுடி டேமேஜ் ஆகாமல் தடுத்திடும்.

ட்ரை ஷாம்பு : உடற்பயிற்சி செய்தால் தலையில் எல்லாம் வேர்த்திருக்கும் அப்போது எண்ணெய் தேய்த்து தலைக்குளிக்க கூடாது. அந்நேரங்களில் ட்ரை ஷாம்பு பயன்படுத்தலாம்.

தண்ணீர் : மிக முக்கியமாக அதிகப்படியான தண்ணீரை குடிக்க வேண்டும், இது உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றவும் ஆரோக்கியமான சருமத்திற்கும் உதவிடும்.

24 1500874289 10

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button