முகப் பராமரிப்பு

உங்களுக்காக இயற்கை வழிமுறை… சருமம், முகம் பொலிவுடன் திகழ வேண்டுமா!

முகமும், சருமமும் பொலிவுடன் திகழ இயற்கை வழிமுறைகள் உங்களுக்காக.

ரோஸ் வாட்டர்: சிறிது பன்னீர் எடுத்துக் கொள்ளுங்கள். பன்னீர் கிடைக்கவில்லையென்றால், புதிய ரோஜா இதழ்களை சிறிது எடுத்துக் கொண்டு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, குளிர வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். இந்த பன்னீரை முகத்தில் தடவிக் கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு: ஒரு உருளைக்கிழங்கை எடுத்து சன்னமாகத் துருவிக் கொள்ளுங்கள். அதனை மிக்ஸியில் போட்டு மைப்போல அரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனை முகத்தில் பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவுங்கள். நன்றாகக் காயும் வரை வைத்திருந்து பிறகு கழுவி விடுங்கள்.

236916342c661b9ae814dd5416f203516b630e4753138148414663745004

எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறிது சிறிதாக தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். போதுமான நீர்ச்சத்து உடலில் இருந்தால், முகம் பொலிவோடு இருக்கும், முகத்தழும்புகளும் மறைந்து காணப்படும்.

காய்கறி ஜூஸ்: ஊட்டச்சத்துக்களும், புரதமும் நிறைந்துள்ள காய்கறிகளை ஜூஸாக்கி அருந்துங்கள். வாரத்திற்கு 3 அல்லது 4 முறையாவது காய்கறி ஜூஸ் அருந்தி வாருங்கள். இதனால் சருமம் பொலிவுடன் பளபளப்பதைக் காண்பீர்கள்.

க்ரீன் டீ: உடலில் உள்ள நச்சுக்களை இயற்கையான வழியில் நீக்க சிறந்த வழி க்ரீன் டீ அருந்துதலே ஆகும். தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் க்ரீன் டீ அருந்தி வந்தால், முகத்தில் உள்ள கருப்பான தழும்புகள் மறைந்துவிடும்.

தக்காளி: ஒரு தக்காளியை எடுத்துக் கொண்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளூங்கள். அதனை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். நன்றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள்.

ஐஸ் கட்டிகள்: சிறிது ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு, அவற்றை முகத்தில் மென்மையாகத் தேயுங்கள். தழும்புள்ள இடங்களில் சற்று அதிகமாகத் தேயுங்கள். தினந்தோறும் தவறாமல் இதனை செய்யுங்கள். பின் அதன் பலன் தெரியும்.

வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் குளிர்ந்த நீர் கொண்டு, முகத்தை நன்கு கழுவி வாருங்கள். இது முகத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக்குவதுடன், படிந்துள்ள பாக்டீரியாக்களையும் நீக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button