மருத்துவ குறிப்பு

கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாத மாத்திரைகள்

கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாத மாத்திரைகள்
கர்ப்பிணிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும், அவர்களை மட்டுமல்லாது, வளரும் கருவையும் பாதிக்கக்கூடும். அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணிகள் சாப்பிடும் பொருட்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் கர்ப்பிணிகள் சாப்பிடும் பொருட்கள் தாயை மட்டுமல்லாமல் சேயையும் பாதிக்கும். குறிப்பாக மருத்துகள். ஆகவே இப்போது கர்ப்பக் காலத்தில் பெண்கள் எடுத்து கொள்ளக் கூடாத மருந்துகளைப் பற்றிப் பார்ப்போம்.• இபுப்ரூஃபன் (ibuprofen) மற்றும் ஆஸ்பிரின் (Aspirin) போன்ற வலி நிவாரணிகளை கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளவே கூடாது. ஏனெனில் அது வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ப்பை பாதிக்கும். ஒருவேளை தாய்க்கு தலை வலி என்றால், அதற்கு இயற்கை சிகிச்சையை கையாளுவதே எப்போதும் சிறந்தது.• பூஞ்சை எதிர்ப்பு மருந்து (Anti-Fungal Drugs) பூஞ்சை தாக்குதல் என்பது கர்ப்பிணிகள் அனுபவிக்கக் கூடிய பொதுவான பிரச்சனையே. இருப்பினும் மருத்துவரை அணுகாமல் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

• முகப்பரு மருந்து (Acne medication) கர்ப்பக் காலத்தில் உடலில் ஹார்மோன்களின் மாற்றங்களினால் முகப்பரு வருவது இயற்கை தான். ஆனால் முகப்பருவை போக்க வேண்டும் என்று எந்த மருந்துகளையும் உட்கொள்ளக் கூடாது. எப்படி முகப்பரு வந்ததோ, அது போல தானாகவே அது போய்விடும்.

• காய்ச்சல் மருந்து (Fever drug) காய்ச்சலுக்காக பாராசிட்டமல் (Paracetomal) போன்ற மருந்துகள் உட்கொள்ளுதலை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் முதல் மூன்று மாதங்களில் பாராசிட்டமல் மாத்திரையை சாப்பிட்டால், அது கருவின் வளர்ச்சியை பாதிக்கும்.

• மன அழுத்த எதிர்ப்பு மருந்து (Anti-Depression Drug) கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்தை குறைக்க எடுத்து கொள்ளும் மருந்து, பிரசவ காலத்தில் குழந்தைக்கு பிறப்பு பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகவே மன அழுத்தத்தை குறைக்க, எப்போதும் யோகா அல்லது தியானம் போன்றவற்றை செய்தலே சிறந்தது.

• ஒவ்வாமை எதிர்ப்பு மருந்து (Anti-Allergy Drugs) பூஞ்சை எதிர்ப்பு மருந்தை போல, ஒவ்வாமை எதிர்ப்பு மருந்தையும் தவிர்க்க வேண்டும். ஒவ்வாமையை இயற்கை முறையிலேயே சரிசெய்ய வேண்டும். உதாரணமாக, சுறுசுறுப்பாக வீட்டை சுத்தம் செய்துவிட்டு தூசிகளில் இருந்து தள்ளி இருத்தல் வேண்டும் மற்றும் சத்தான உணவு உண்பதன் மூலம் நோய் எதிர்ப்பை வலுப்படுத்தலாம்.

• ஆன்டி-மோஷன் மருந்து (Anti-Motion Drugs) கர்ப்பக் காலத்தில் இவ்வகை மருந்துகளை எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் இந்த மருந்து குழந்தைக்கு பாதிப்பை விளைவிக்க கூடியது ஆகும்.

• தூக்க மாத்திரை சாதரணமாகவே தூக்க மாத்திரை உட்கொள்ளுதல், உடலில் ஆரோக்கியமற்ற தாக்கத்தை ஏற்படுத்த விடும். அதிலும் கர்ப்பிணிகளுக்கு என்றால் அதிக அளவில் பாதிப்பை உருவாக்கும். ஆகவே தூங்குவதற்கு மருந்து உட்கொள்ளுதலை காட்டிலும், கண்களை மூடி அமைதியாய் இருத்தலே சிறந்தது.

• மூலிகைகள் மூலிகை மருந்துகள் இயற்கை தாவரங்களில் இருந்து எடுக்கப்படுவதாய் இருந்தாலும், கர்ப்பத்தின் போது மூலிகைகள் உட்கொள்ளுதலை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கற்றாழை, ஜின்செங் மற்றும் ரோஸ்மேரி போன்ற மூலிகைகளைத் தவிர்த்தல் வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button