மருத்துவ குறிப்பு

அடிபட்ட புண் ஆறாமல் இருக்கா? இதோ எளிய நிவாரணம்! இந்த மூலிகைகளில் ஒன்றை பயன்படுத்தி பாருங்க

பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் காயம் ஏற்படுவது உண்டு.

உடலில் தோல் கிழிந்து வெட்டப்பட்டு உள் அடி படும் போது காயம் ஆறினாலும் புண் ஆறுவதற்கு நீண்ட காலம் ஆகும்.

அதிலும் குறிப்பாக உடலில் நீரிழிவு, மோசமான வேறு வியாதிகள், ரத்த தமனி அல்லது நாளங்களில் குறைபாடு போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவர்களுக்கு காயங்கள் ஆறுவதற்கு அதிகமான காலம் உண்டாகும்.

இருப்பினும் காயங்கள் ஆறினாலும் மீண்டும் மீண்டும் அந்த இடத்தில் புண்கள் உண்டாக கூடும்.

இதனை ஒரு சில மூலிகைகள் கொண்டு எளிதில் குணமாக்க முடியும். தற்போது அந்த மூலிகைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

 

 

 

 

  • தினமும் காலையும் இரவும் புண்ணுக்கு மருந்து தடவுவதற்கு முன்பு அத்திமரப்பட்டை ஒரு கைப்பிடி எடுத்து மண் சட்டியில் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் நீர் விட்டு (காயங்களுக்கு ஏற்ப) கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டி வைக்கவும். அவை நன்றாக ஆறியதும் புண் இருக்கும் இடத்தில் கழுவி துடைத்து உலர்ந்ததும் பிறகு மருந்து போடலாம். அத்திமரப்பட்டை நீர் புண்ணின் ஆழம் வரைக்கும் சென்று உள்ளிருக்கும் கிருமிகளை நீக்கிவிடும்.

 

  • ஊமத்தை இலையை கையளவு எடுத்து மண் போக சுத்தம்செய்து அம்மியில் வைத்து மைய அரைத்து முட்டையின் வெள்ளைக்கரு, அரிசி மாவு கலந்து குழைத்து புண் கட்டி, வீக்கம் இருக்கும் இடத்தில் கனமாக பற்று போல் போட வேண்டும். இந்த பற்று காய காய துடைக்கமால் அதன் மேலேயே பற்று போட வேண்டும். மறுநாள் காலை புண் இருக்கும் இடத்தை இளஞ்சூடான நீரில் கழுவி மீண்டும் இந்த பற்றை போடலாம். தொடர்ந்து 5 நாட்கள் வரை போட்டால் கட்டியாக இருந்தால் உடைந்து சீழ், அங்கு சேர்ந்திருக்கும் கெட்ட ரத்தம் அனைத்தையும் வெளியேற்றும்.

 

  • கடுக்காய்தூள், காசுக்கட்டி தூள் இரண்டையும் வாங்கி கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும். அதன் பிறகு தினமும் காலை வேளையில் பசு நெய்யில் கடுக்காய்த்தூளையும், காசுக்கட்டி தூளையும் 5 முதல் 10 சிட்டிகை வரை எடுத்து ( வயதுக்கேற்றபடி கூட்டியும் குறைத்தும் கொள்ளலாம்) நாக்கு, உதடு பகுதியில் தடவி வரவேண்டும். தினமும் காலையும் மாலையும் இருவேளையும் தடவி வந்தால் நாக்கு புண், உதடு புண் குணமாகும்.

 

  • ​கானாம் வாழை ஆறாத நீண்ட நாள் புண்ணின் ரணத்தை ஆற்ற இவை உதவும். இதை கானாங்கோழி கீரை என்றும் சொல்வார்கள். இந்த இலையை அம்மியில் வைத்து மை போல் அரைத்து ஆறாத புண்ணின் மீது வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவும். மறுநாள் அந்த விழுதை எடுத்து வேறு விழுதை வைத்து கட்டிவிடவும். தொடர்ந்து கட்டிவந்தால் அந்த விழுதோடு புண்ணில் இருக்கும் சீழும் வெளியேறிவிடும்

 

  • தொட்டாற்சுருங்கி இலைகளை சிறு உரலில் நீரிவிடாமல் இட்டு இடித்து சாறாக்கி அதை புண்ணின் ஆழம் வரை இறங்கும்படி விட்டு பிறகு அந்த இலையை வைத்து கட்டிவிடவும். இலை காய காய சாறை விட்டு கட்டிவந்தால் 7 நாட்களில் ரணம் ஆறக்கூடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button