ஆரோக்கிய உணவு

குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்கும் சிறந்த உணவிகள்!

குழந்தைகளைப் பராமரிப்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. சளி, காய்ச்சல், அலர்ஜி என்று சின்னச் சின்ன உபாதைகள் கூட அவர்களை எளிதில் தொற்றிக் கொள்ளும். இதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி இல்லாமலோ அல்லது மிக மிகக் குறைவாகவோ இருப்பது தான்.

 

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதோடு நின்று விடாமல், பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளையும் ஊட்டி விட வேண்டும். அது இதுவென்று காரணம் சொல்லி தேவையான உணவுகளைக் கொடுக்காமல் விட்டுவிடக் கூடாது. அப்போது தான் குழந்தைகளை எந்தவிதமான நோய்களும் அவ்வளவு எளிதில் தொற்றாது. அதற்காக, கடையில் அல்லது தெருவில் கிடைக்கும் கண்ட கண்ட உணவுப் பொருட்களை வாங்கி குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.

 

குழந்தைகளை எளிதில் நோய்த்தொற்றுக்கள் தாக்காத வகையில், அவர்களுக்கேற்ற 10 டாப் உணவுகள் குறித்த விவரங்கள் இதோ…

சுடுநீர்

குழந்தைகளுக்குப் பெரும்பாலும் நிறைய குடிநீர் கொடுப்பது நல்லது. அதுவும், மழை மற்றும் குளிர் காலங்களில் அவர்களை சுடுநீர் மட்டுமே குடிக்க வைக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அந்தரங்க சுகாதார பழக்கங்கள்!ஒவ்வொரு ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அந்தரங்க சுகாதார பழக்கங்கள்!

அவித்த உணவு

அவித்த உணவுகளை மட்டுமே பெரும்பாலும் குழந்தைகள் உண்பதற்குக் கொடுக்க வேண்டும். எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நலம். அவை, குழந்தைகளின் நோயெதிர்ப்புத் திறனை பாதிக்கக் கூடியவை ஆகும்.

உங்க அப்பா சர்க்கரை நோயாளியா? நீண்ட காலம் அவர் ஆரோக்கியமா இருக்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா?உங்க அப்பா சர்க்கரை நோயாளியா? நீண்ட காலம் அவர் ஆரோக்கியமா இருக்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள்

குழந்தைகளின் உணவுக் கட்டுப்பாட்டில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் மிகவும் முக்கியம். ஆகவே ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகமுள்ள பூசணிக்காய், குடைமிளகாய், பெர்ரி ஆகியவற்றைக் குழந்தைகளின் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, பல நோய்த் தொற்றுக்களையும் அண்ட விடாமல் தடுக்கின்றன.

நமது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்கும் எளிய யோகாசனங்கள்!நமது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்கும் எளிய யோகாசனங்கள்!

ஜூஸ்

வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பழச்சாறுகளை மட்டுமே குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். வெளியிலிருந்து வாங்கப்பட்ட ஜூஸ்களைக் கொடுக்கக் கூடாது. அவற்றால் தொற்றுக்கள் அதிகமாகும், ஜாக்கிரதை!

பழங்கள்

அதேப்போல், குழந்தைகளுக்கு நிறையப் பழங்களை உண்ணக் கொடுத்துப் பழக்கப்படுத்த வேண்டும். குறிப்பாக, மாதுளை மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றில் உள்ள சத்துக்கள், குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

காய்கறிகள்
காய்கறிகள்
குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுக்களைத் தவிர்ப்பதில் காய்கறிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தும் முன், நன்றாகக் கழுவ வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

சமைத்த உணவு

குழந்தைகளுக்கு அரைகுறையாகச் சமைக்கப்பட்ட அல்லது பச்சையான உணவுகளைக் கொடுக்கக் கூடாது. குறிப்பாக, அசைவ உணவுகள் கொடுக்கும் போது, அவை நன்றாகச் சமைக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இறைச்சிகள்

அசைவ உணவுகளில் சிக்கன், மட்டன், முட்டை, கடல் உணவுகள் ஆகியவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். அப்போது தான் அவர்களுடைய வயிறு நிறையும்; நோய்த் தொற்றுக்களும் தவிர்க்கப்படும்.

வைட்டமின் சி

வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகள் எப்போதுமே குழந்தைகளுக்கு ஆரோக்கியமானவையாகும். அவற்றில் சத்து அதிகம்; நோயெதிர்ப்பு சக்தியும் அதிகம். ஆரஞ்சு ஜூஸ், கிவிப் பழம் உள்ளிட்டவற்றில் வைட்டமின் சி அதிகம்.

எக்ஸ்ட்ரா சத்துக்கள்

இவை தவிர, குழந்தை மருத்துவர்களின் ஆலோசனைப் படி மருந்துக் கடைகளில் கிடைக்கும், அதிக சத்துக்களைத் தரும் பவுடர் உணவுகளையும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button