மருத்துவ குறிப்பு

பெண்கள் மீதான வன்முறையை ஒடுக்க வேண்டும்

பாலியல் வன்முறையில் மிகவும் கீழ்த்தரமானது கற்பழிப்பாகும் இது பெண்களுக்கான ஒரு அச்சுறுத்தல் ஆகும்.

பெண்கள் மீதான வன்முறையை ஒடுக்க வேண்டும்
பாலியல் வன்முறை என்பது ஒரு பெண்ணுடன் அவரது சம்மதம் இல்லாமல் அல்லது அச்சுறுத்தி, பலாத்காரம் மூலம் அவளது சம்மதம் பெற்ற பின்னர் அல்லது கணவனிடம் இருந்து சட்ட ரீதியாக பிரிந்து வாழும் போது அல்லது போதைப்பொருள், மதுபானம் அருந்திய பின்னர் நிலையற்ற மனநிலையில் இருக்கும் போது அல்லது 16 வயதிற்கு கீழ்ப்பட்ட பெண்ணின் சம்மதமில்லாமல் பாலியல் வல்லுறவு கொள்ளல், ஏதேனும் பாலியல் செயற்பாடுகள், பலாத்காரம், முறையற்ற உடலுறவு என்பன பாலியல் வன்முறை ஆகும்.

பாலியல் வன்முறையில் மிகவும் கீழ்த்தரமானது கற்பழிப்பாகும் இது பெண்களுக்கான ஒரு அச்சுறுத்தல் ஆகும். இன்று பெண்கள் விபச்சாரதத்திற்காக பெற்றோரால், கணவனால், காதலனால் விற்கப்படுகின்றனர். திருமணசேவை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் பெண்கள் வெளிநாட்டுக்கு கடத்தப்படுகின்றனர்.

யுத்தங்களின் போதும் பெண்கள் இராணுவ வீரர்களினால் கற்பழிக்கப்பட்ட சம்பவங்களும் உள்ளன. இன்றைய பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் டிஜிட்டல் வன்முறை ஒரு புதிய பரிமாணம் ஆகும். கையடக்கத்தொலைபேசி மற்றும் இன்டர்நெட் போன்ற தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் ஊடாக இழைக்கப்படும் வன்முறை டிஜிட்டல் அல்லது சைபர் வன்முறை எனப்படும். ஆபாச புகைப்படம், பெண்களின் அனுமதியின்றி அவர்களின் பொருத்தமற்ற படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் மேலேற்றுதல், அதனைக்காட்டி பெண்ணை அச்சுறுத்தி பணம் பறித்தல் என்பனவும் இதிலடங்கும்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இந்தியா உலகளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் பெண் சிசுக் கொலை, பெண் குழந்தைகள் கொலை மற்றும் ஆட்கடத்தல் போன்றவற்றால் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆண்களின் அதிகாரம் நிறைந்த உலகில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கண் முன்னே நிறைந்து இருந்தாலும் அதைவிட அதிகமான தடைகளும் அவமானங்களும் பெண்களுக்கு உள்ளன. கூடுதலாக ஆண்களின் பெண்ணுரிமை மீறல் ஜனநாயகப் பின்னடைவுக்கு காரணமாவதோடு சமூக அவலங்களுக்கும் பெண்களை இட்டுச்செல்கின்றது. இந்த அவலங்களுக்கு எதிராக பெண்களுடன் சேர்ந்து அரசுகள் போராட வேண்டும். பெண்களையும் குழந்தைகளையும் அரசுகள் பாதுகாப்பதன் மூலமே பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை இல்லாது ஒழிக்க முடியும்.

பெண்களுக்குத் தேவையான சமச்சீரான கல்வியை அரசுகள் அளிக்க முன்வரவேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை சமுதாயம் மாற்றிக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான தடைகளை யெல்லாம் தாண்டி பெண்கள் சமுதாயத்தில் முன்னுக்கு வரவேண்டும்.

மனித வளத்துக்காக பெண்கள் செய்யும் தியாகங்களையும் எதிர்காலப் பயன்களையும் கருத்தில் கொண்டு பெண்கள் மீதான வன்முறையை ஒடுக்க போராட வேண்டும். 201606010908089663 Violence and discrimination against women SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button