201705151339538889 Causes of foot pain leg pain SECVPF
உடல் பயிற்சி

கால்வலி வருவதற்கான காரணங்கள்

கால்வலி என்ற சொல் நாம் அடிக்கடி பலர் சொல்ல கேட்கும் சொல். பொதுவில் இடுப்பிலிருந்து, பாதம் வரை எங்கு வலி ஏற்பட்டாலும் கால் வலி என்றுதான் மக்கள் வழக்கமாகச் சொல்வார்கள்.

கால்வலி வருவதற்கான காரணங்கள்
கால்வலி என்ற சொல் நாம் அடிக்கடி பலர் சொல்ல கேட்கும் சொல். மூட்டுக்களினால் ஏற்படும் வலி மிக அதிகமாக காணப்படுகின்றது. என்றாலும் கால் வலிக்கு பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன என்பதால் இதற்கு நாம் கவனம் செலுத்த வேண்டும். பொதுவில் இடுப்பிலிருந்து, பாதம் வரை எங்கு வலி ஏற்பட்டாலும் கால் வலி என்றுதான் மக்கள் வழக்கமாகச் சொல்வார்கள். ஆனால் இக்கட்டுரையில் நாம் இடுப்பு, பாதம் இதனை தவிர்த்து தொடை மடிப்பு முதல் கணுக்கால் வரையான வலியினைப் பார்ப்போம்.

வலி என்பது கூராகா, மந்தமாக, மரத்து குறுகுறுப்பாக, எரிச்சலாக, வலியாக இருக்கலாம். இந்த வலி திடீரென வந்து குறுகிய காலமாக அல்லது நீண்டகாலமாக அனுபவிக்கும் வலியாக இருக்கலாம். நரம்புகள் தான் நாம் அனுபவிக்கும் வலிக்கு காரணம். இந்த நரம்புகள் அதிக அழுத்தம், அதிக அல்லது குறைந்த உஷ்ணம், திசுக்கள் பாதிப்பினால் ஏற்படும் ரசாயணங்கள் இவற்றினை காரணமாக ஏற்படலாம்.

* கீழ் இடுப்பு முதல் குதிகால் வரை கால் வலி என்கிறோம்.
* பொதுவில் அடிபடுதல் குறிப்பாக விபத்துகளினால் ஏற்படும் பாதிப்புகள் வலிக்கு காரணம் ஆகின்றன.
* வெளிப்பக்கத்திலுள்ள ரத்த குழாய்கள் பாதிப்பினாலும் வலி ஏற்படலாம்.

* காலுக்கு அதிக உழைப்பு, விளையாட்டு பயிற்சி அதிகம் சுளுக்கு, எலும்பு முறிவு ஆகிய காரணங்களால் வலி ஏற்படலாம்.
* நரம்பு பாதிப்பு, ரத்த குழாய் பாதிப்பு, சதைகள் பாதிப்பு, எலும்பு பாதிப்பு காரணமாக கால் வலி ஏற்படலாம்.
* சாதாரண கால் வலி சிறிய கவனிப்பிலேயே சரியாகி விடும்.

* அதிக ஓட்டப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் காலின் அதிக உழைப்பு காரணமாக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
( வெளிப்புற நரம்புகள் மூளை, தண்டுவடம் சொல்வதற்கேற்ப இயங்காத பொழுது பாதிப்பு இருக்கும்.
* கால்களில் ஒரு குறுகுறுப்பு, சவுகர்யமின்மை போன்ற பாதிப்பு ஏற்படலாம். இதனை கால்களின் அமைதியின்மை என்கிறோம். குறிப்பாக படுக்கும் பொழுது இந்த பாதிப்பு அதிகம் தெரிவதால் பாதிப்பு உடையவருக்கு தூக்கமின்மை இருக்கும்.

* குறிப்பிட்ட நரம்பில் பாதிப்பு
* சயாடிகா எனும் தடித்த நரம்பில் பாதிப்பு
ஆகிய காரணங்களால் நரம்பு சம்பந்தமான வலி ஏற்படலாம்)
* மூட்டு வலி

* சதை, தசை நார் இவற்றில் வலி
* இரவில் தசை பிடிப்பு
* எலும்பு முறிவு
இவைகளால் எலும்பு, தசைகளில் வலி ஏற்படலாம். ரத்த குழாய் அடைப்பினாலும் வலி ஏற்படலாம்.

ஆடுதசையில் ஏற்படும் பிடிப்பு அநேகருக்கு இரவில் ஏற்படும். தசையினை இறுக்க பிடித்ததுபோன்ற ஒரு உணர்வு இருக்கும். அதிக வயது கூடியவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ஏற்படும். பொதுவில் இதற்கு மருத்துவ கவனிப்பு என்று அதிகம் சொல்வதில்லை.

சில நிமிடங்களில் தானே சரியாகி விடும். ஆனால் உடலில் நீர் பறருமை, குடி இவற்றில் ஏற்படும் பாதிப்பிற்கு மருத்துவ உதவி அவசியம். தேவையான அளவு நீர் குடிப்பதும் தீர்வாக அமையும். சிலருக்கு தொடர்ந்து இந்த தசைப்பிடிப்பு ஏற்படும் பொழுது சில மருந்துகளை மருத்துவர்கள் சிபாரிசு செய்வர்.

சில மருந்துகளும் இத்தகைய பிடிப்பினை ஏற்படுத்தும் என்பதால் அதனையும் மருத்துவரிடம் கூறி ஆலோசனை பெறுதல் அவசியம். நீரழிவு நோய் வெளியுற நரம்புகள் பாதிப்பு உடையவர்களுக்கும் இந்த தசை பிடிப்பு பாதிப்பு ஏற்படுவது உண்டு.

* அதிக பயிற்சி செய்பவர்கள் விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு இத்தகைய பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
* கல்லீரல் பாதிப்பு உடையோர்
* அதிக வயிற்றுப்போக்கு

* உடலில் தாது உப்புகள் சரிவர இன்மை
* பாத விளைவு இன்றி இருத்தல்
* தைராய்டு குறைபாடு

* ஈயம் நச்சு
* சதைகளின் சோர்வு
* கருத்தடை மாத்திரை
* பார்க்கின்ஸன்ஸ் நோய்

ஆகியவைகளும் ஆடு தசை பிடிப்பு பாதிப்பிற்கு காரணமாகின்றன. இதற்கு முறையான பயிற்சியும், தேவையான மருத்துவ உதவியும் அவசியம். யோகா சிறந்த நிவாரணம் அளிக்கும்.தீராத பாதிப்பு உடையவர்கள் இதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். உங்கள் கால் விரல்களின் மேல் நின்று சிறிது நிமிடம் நடக்கலாம். 201705151339538889 Causes of foot pain leg pain SECVPF

Related posts

கர்ப்பப்பை தசைகளை இறுக்குவதற்கான கெகல் பயிற்சி !!

nathan

கலோரிகளை எரிக்க சிறந்தது ஜாக்கிங்கா? சைக்கிள் பயிற்சியா?

nathan

நடைப்பயிற்சிக்கு முன்பும் – பின்பும் செய்யக்கூடிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சி

nathan

தொடைத் தசையை வலுவாக்கும் லெக் ரொட்டேஷன் பயிற்சி

nathan

இடுப்பு சதையை குறைத்து உடலை ஃபிட்டாக்கும் எளிய பயிற்சி! – இதை நீங்களும் செய்யலாம்

nathan

நடைப்பயிற்சி நல்லன தரும்!

nathan

விரைவில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சியுடன் கூடிய சும்பா நடனம்

nathan

மனதுக்கும், உடலுக்கும் அமைதி தரும் சவாசனம்

nathan

விரல்கள் செய்யும் விந்தை சுவாசகோச முத்திரை!

nathan